தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டயட் அடை டயட் அடை

Go down

டயட் அடை டயட் அடை Empty டயட் அடை டயட் அடை

Post  meenu Wed Jan 30, 2013 1:43 pm

ஓட்ஸ் மாவு-ஒரு கையளவு (வறுத்துப்பொடித்தது)

பார்லி மாவு-ஒரு கையளவு

கேழ்வரகு மாவு-ஒரு கையளவு

முருங்கைக்கீரை-மூன்று கைப்பிடி

சின்ன வெங்காயம்-3
பச்சை மிளகாய்-1

உப்பு-தேவைக்கு

எண்ணெய்-தேவைக்கேற்ப‌

மேலும் உங்களின் விருப்பம்போல் சீரகம்,கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை என சேர்த்துக்கொள்ளலாம்.


செய்முறை......


• கீரையைக் கழுவி சுத்தம் செய்து,தண்ணீரை வடியவைத்து எடுத்துக்கொள்ளவும்.

• வெங்காயம்,பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.


• ஒரு அகலமான தட்டில் மாவுகளுடன் உப்பு,கீரை,வெங்காயம்,பச்சை மிளகாய் இவற்றையும் சேர்த்து கலக்கவும்.


• பிறகு சிறிதுசிறிதாகத் தண்ணீர் தெளித்து அடை தட்டும் பதத்தில் மாவைப்
பிசைந்துகொண்டு,ஈரத்துணியால் ஒரு 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.


• தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி காயவிடவும். மாவிலிருந்து ஒரு எலுமிச்சை
அளவு பிரித்தெடுத்து,ஒரு தட்டைக் கவிழ்த்துப்போட்டு, அதன் மேல்
ஈரத்துணியைப்போட்டு, அடையாகத் தட்டவும். அடையின் எல்லா பகுதியும் சமமாக
இருக்கட்டும்.


• கல் காய்ந்ததும் தட்டி வைத்துள்ள அடையை எடுத்துக் கல்லில் போட்டு, அடையைச் சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு மூடி வேக வைக்கவும்.


• தீ மிதமாக இருக்கட்டும். தீ அதிகமானால் தீய்ந்துவிடும். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum