டயட் வெஜ் குருமா
Page 1 of 1
டயட் வெஜ் குருமா
தேங்காய் சேர்க்காத வெஜ் குருமா இது. எனவே டயட் குருமா என்றும் சொல்லலாம்.
தேவையான பொருட்கள்:
காரட் -2
பச்சைப்பட்டாணி -1 கப்
பீன்ஸ் -10
உருளைக்கிழங்கு -2
காலிபிளவர் -சிறு துண்டு
முட்டைக்கோஸ் -சிறிதளவு
பெரிய வெங்காயம் -2
பச்சை மிளகாய் -2
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
மல்லித்தூள் -3 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் -1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன்
பட்டை கிராம்பு, சோம்பு, ஏலக்காய் -சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சம்பழம் -1 மூடி
ரீபைன்ட் எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
* காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிபிளவர், கோஸ் ஆகியவற்றை பொடியாக அரிந்து பச்சைப்பட்டாணியுடன் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
* வெங்காயம், பச்சை மிளகாயை நீள வாக்கில் கீறிக்கொள்ளவும்.
* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு. ஏலக்காய் தாளித்து அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதங்கியதும், அவற்றுடன் இஞ்சி பூண்டு விழுதையும் போட்டு வதக்கவும்.
* குக்கரில் பொடியாக நறுக்கிய காய்கறி கலவை, வதக்கிய வெங்காய கலவை சேர்த்து அத்துடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி வேக விடவும்.
* வெந்ததும் இந்த மசாலாவை லேசாக மசித்து எலுமிச்சம்பழம் பிழிந்து இறக்கி இதில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
* தேங்காய் சேர்க்காததால் டயட் இருப்பவர்களுக்கும், வயதானவர்களுக்கும் ஏற்ற சத்தான குருமா இது. சப்பாத்தி, பூரி, பரோட்டா, நான், தோசை வகைகளுக்கு ஏற்றது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum