குளிர்ச்சி தரும் கோடைக்கால அழகு குறிப்புகள்
Page 1 of 1

• வெள்ளரியில் சருமத்திற்கு பலத்தையும், பளபளப்பையும் தரும் வைட்டமின், சிலிக்கான் சத்துக்கள் இருக்கின்றன. அதனை வெட்டி, கண்களில் வைப்பதால் பெருமளவு பலன் கிடைப்பதில்லை. வெள்ளரிக்காயை துருவி, அரைத்து பூசிக்கொண்டால் அதிக பலன் கிடைக்கும்.
• நுங்கையும் அழகுக்கு உபயோகிக்கலாம். நுங்கை மிக்சியில் அரைத்து அதில் பச்சை பயறு மாவு, அரிசி மாவு கலந்து பேஸ்ட் ஆக்கி உடலில் பூசி `ஸ்கிரப்' போல் பயன்படுத்த வேண்டும். இதனை குளிக்க செல்வதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னால் பூசி, சோப்பு போடாமல் குளிக்கவேண்டும். இது சருமத்திற்கு அதிக பளபளப்பை தரும். கோடை உஷ்ண பாதிப்பையும் போக்கும்.
• கஸ்தூரி மஞ்சள் கிழங்கு ஒன்றை வாங்கி, அதனை நான்கு துண்டுகளாக வெட்டி, 20 லிட்டர் தண்ணீரில், குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு போட்டு வையுங்கள். கிட்டத்தட்ட 30 கிராம் அளவுக்கு அந்த மஞ்சள் இருக்கவேண்டும். அதோடு அரை கப் காய்ச்சாத பாலை கொட்டுங்கள். தண்ணீர் மஞ்சள் நிறம் கலந்ததாக மாறிய பின்பு அதில் மாலை நேர குளியல் போட்டால் உடம்பில் உற்சாகம் பொங்கும். தோல் வியாதிகளும் வராது. இந்த குளியலின்போது தலையில் தண்ணீர் படக்கூடாது.
• கோடையில் உடலை உஷ்ணம் அதிகம் தாக்கும். அதனால் உடல் சீதோஷ்ண சமன்பாடு சீரற்று இருமல், எரிச்சல், அரிப்பு போன்ற அவஸ்தைகள் ஏற்படும். உஷ்ணத்தை குறைக்க உச்சி முதல் பாதம் வரை உடல் முழுக்க நல்லெண்ணெய் தேய்க்கவேண்டும். அரை மணி முதல் ஒரு மணி நேரம் ஊறவேண்டும். பின்பு தலைக்கு சீயக்காய் பயன்படுத்தி குளிக்க வேண்டும். உடலுக்கு பச்சை பயறு மாவு பூசி, எண்ணெய் பிசுக்கை போக்கவேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் இவ்வாறு எண்ணெய் குளியல் செய்தால், உச்சி குளிரும். வெப்பம் விலகும்.''

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அழகு குறிப்புகள் அழகு குறிப்புகள்
» அழகு குறிப்புகள்
» அழகு குறிப்புகள் அழகு குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
» இயற்கை அழகு குறிப்புகள்
» அழகு குறிப்புகள்
» அழகு குறிப்புகள் அழகு குறிப்புகள்
» எளிய அழகு குறிப்புகள்
» இயற்கை அழகு குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum