தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அழகு குறிப்புகள் அழகு குறிப்புகள்

Go down

அழகு குறிப்புகள் அழகு குறிப்புகள் Empty அழகு குறிப்புகள் அழகு குறிப்புகள்

Post  meenu Wed Jan 30, 2013 1:22 pm

* கசகசாவை பாலில் ஊற வைத்து அரைத்து முகத்திலும், உடலிலும்
தேய்த்து நன்கு ஊறியதும் குளித்து வந்தால் முகப்பரு மாறும். உடலும்
பளபளப்பாகும்.

* வெந்தயம், பாசிப்பயறை நீரில்
ஊறவைத்து காலையில் அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரத்திற்குப் பின்
குளித்து வர தலைச்சூடு நீங்கும். கண்கள் குளிர்ச்சியாகும். முடியும் அதிகம்
உதிராது.

* பொடுகுத் தொல்லையா? வெள்ளை மிளகை
பாலில் விழுதாக அரைத்து , தலையில் தடவி அரைமணி நேரம் ஊற விடுங்கள். பிறகு
முடியை அலசுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

*
வெண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடுபடுத்தி குளிர வைத்து
வயிற்று பகுதி, இடுப்பு, மார்பகம் மற்றும் கைகளில் தேய்த்து வந்தால் கருமை
நிறம் படிப்படியாக மறையும்.

* இளஞ்சூடான வெந்நீரில்
இரண்டு தேக்கரண்டி தேன் விட்டு குளித்தால் சருமத்தில் ஈரப்பதம்
நீடிக்கும். இது வயிற்றுச் சுருக்கத்தைத் தள்ளிப்போடும்.

*
வெள்ளைத் துணியை வெதுவெதுப்பான பாலில் முக்கி வயிறு மற்றும் இதர
பகுதிகளில் இதமாக மசாஜ் செய்யுங்கள். உங்கள் வயிற்றில் மட்டுமல்ல... எந்த்
இடத்திலும் கூட கறுப்புத் தழும்பு அண்டாது.

* மூங்கில் சாம்பலை சூரிய காந்தி எண்ணெயில் கலந்து தேய்த்தால் , வழுக்கைத் தலையில் கூட முடி வளரும். சிகையும் உதிராது.

* மூங்கில் வேரின் சாம்பலால் பல் துலக்கினால் பல் நோய்கள் பறந்து போகும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum