தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிறுநீரக நோயை போக்கும் ரோபோ அறுவை சிகிச்சை

Go down

சிறுநீரக நோயை போக்கும் ரோபோ அறுவை சிகிச்சை Empty சிறுநீரக நோயை போக்கும் ரோபோ அறுவை சிகிச்சை

Post  meenu Sun Jan 27, 2013 1:41 pm


முன்பெல்லாம் சிறுநீரக கோளாறுகளை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து நோயாளிகளை காப்பாற்றி வந்தனர். என்ன மாதிரியான கோளாறு, அதனைப் போக்க எந்த பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை டாக்டர்கள் குழு முடிவு செய்து ஆபரேஷன் செய்தது. ஆனால் தற்போது சிறுநீரக அறுவை சிகிச்சையை ரோபோவே மிகவும் துல்லியமாக செய்து கோளாறுகளை முழுமையாக சரிசெய்து பிரமிக்க வைத்து விடுகிறது.

இத்தகைய ரோபோ அறுவை சிகிச்சைகள் சென்னையில் கூட அதிக அளவில் நடந்து வருகிறது என்கிறார் அப்பல்லோ மருத்துவமனையை சேர்ந்த பிரபல சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரமேஷ். அவர் ரோபோ சிறுநீரக அறுவை சிகிச்சை பற்றி கூறியதாவது:-

தற்போது சென்னையில் சிறுநீரக நோய்க்கு ரோபோ அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. சிறுநீரக நோய்க்கு பயன்படுத்தப்படும் ரோபோவுக்கு 4 கைகள் உள்ளன. அறுவை சிகிச்சையின் போது இந்த ரோபோவின் 4 கைகளும் பம்பரமாக சுழன்று வேலை செய்யும். ரோபோ அறுவை சிகிச்சையின் போது உடலை கிழிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

ரத்தமும் அதிகம் வெளியேறாது மிகவும் பாதுகாப்பானது. வலியும் குறைவு. விரைவில் நோயாளிகளை குணப்படுத்தி விடலாம். சிறுநீரக ரோபோ அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓரிரு நாளில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விடலாம். ரோபோ அறுவை சிகிச்சையால் புற்று நோய்களை முழுவதுமாக குணப்படுத்த முடியும்.

உடல் பருமன், பெண்களுக்கான நோய்க்கும் ரோபோடிக் அறுவை சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. முன்பெல்லாம் ரோபோடிக் அறுவை சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு மக்கள் சென்றனர். தற்போது ரோபோடிக் அறுவை சிகிச்சை நம் நாட்டிலும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இனிமேல் யாரும் வெளிநாடுகளுக்கு செல்ல தேவையில்லை. இதயம், தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சைகளுக்கும் ரோபோவை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

4 கைகளுடன் கலக்கும் `ரோபோ'.........

வெளிநாடுகளில் பெரிய தொழிற்சாலைகளில் ரோபோ எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதை போன்றே மருத்துவமனைகளிலும் அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதன்படி இந்தியாவில் மருத்துவத் துறையில் ரோபோவை பயன்படுத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள எங்களது மருத்துவ மனைக்கு டாவின்சி என்ற அறுவைச் சிகிச்சை செய்யும் ரோபோ வாங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இதுவரை ஏராளமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் பூரண குணம் அடைந்துள்ளனர். வயதான மருத்துவர்களுக்கு கைநடுக்கம். நீண்ட நேரம் நின்று கொண்டே அறுவைச் சிகிச்சை செய்வதில் சிரமம், அதிக அளவிலான ரத்த சேதம், பெரிய அளவில் தழும்பு, அதிக வலி போன்றவற்றால் நோயாளி, மருத்துவர் என இருதரப்புக்கும் சில இடையூறுகள் உள்ளன.

இந்த நிலையில், இந்த புதிய ரோபோ, மருத்துவரின் கையசைவுக்கு ஏற்ப அறுவைச் சிகிச்சை செய்யும் திறன் உடையது. சிகிச்சை செய்யப்படும் இடத்தை முப்பரிமாண தோற்றத்தில் பார்த்துக் கொண்டே, லேப்ராஸ்கோபிக் முறையில் செய்யப்படுவதைப் போன்றே சிறிய அளவிலான துளைகளை போட்டு சிக்கலான சிகிச்சைகளையும் அதிக ரத்த சேதம், வலி இல்லாமல் ரோபோ செய்து முடிக்கிறது.

இதனால் இதய அறுவை, சிறுநீரகம், குடல், புராஸ்டேட் அறுவை, தொப்பை குறைப்பு உள்ளிட்ட அனைத்து வகையான அறுவைச் சிகிச்சைகளையும் எளிதில் செய்ய முடியும். ரோபோவுக்கு நான்கு கைகள் உள்ளதால் 3 மணி நேரம் நடக்கக் கூடிய அறுவைச் சிகிச்சையை 1 மணி நேரத்திலேயே முடிக்க முடியும். இந்த ஆண்டுக்குள் ரோபோ மூலம் 200-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

ரத்தஇழப்பு குறைவு..........

டாவின்சி ரோபோக்கள் செய்யும் சிறுநீரக அறுவை சிகிச்சையால் ஏற்படும் நன்மைகள் இதோ:- சிறுநீரக நோயாளிகளுக்கு ரத்த இழப்பு ஏற்படுவது மிகவும் குறைவாக இருக்கும். நோயாளிக்கு வலியும் குறைவாக இருக்கும். ரோபோ ஆபரேசனுக்கு பிறகு நோயாளி நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

சிறுநீரக கிளான்டில் உள்ள கட்டிகளை எளிதாக நீக்கிவிடும்.சிறுநீரகத்திற்கு சிறு அளவில் கூட சேதத்தை ஏற்படுத்தாது. ஆபரேசன் சமயத்தில் சிக்கல் எதுவும் இருக்காது. சிறுநீரக புற்றுநோய்க் கான செல்களை அகற்றி முழுமையாக குணப்படுத்தும் தன்மை டாவின்சி ரோபோவுக்கு உண்டு. இந்த ரோபோ அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடியும் .

எந்திரன் போல.........

ரஜினி நடித்த எந்திரன் படத்தில் கூட ரோபோ ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்ப்பது போல காட்சி அமைத்திருந்தார்கள். அது தற்போது முற்றிலும் உண்மையானதாக மாறி உள்ளது. மிகவும் சிக்கல் நிறைந்த சிறுநீரக புரோஸ்டேட் அறுவை சிகிச்சையில் டாவின்சி ரோபோக்கள் படு கில்லாடிகளாக உள்ளது. இதேபோல் இனி அனைத்து வகை அறுவை சிகிச்சைகளுக்கும் தனித்தனி ரோபோக்கள் உருவாக்கப்படுகிறது. இந்த ரோபோக்கள் வந்தால் டாக்டர்களுக்கு அதிக வேலை இருக்காது.

ஆண்டுக்கு 60 ஆயிரம் அறுவை சிகிச்சைகள்........

தற்போது சிறுநீரக புரோஸ்டேட் அறுவை சிகிச்சைக்கு டாவின்சி ரோபோ பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை ரோபோக்கள் மூலம் ஆண்டுக்கு 60 ஆயிரம் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது. இதன் மூலம் மனிதனின் சிறுநீரக மற்றும் `செக்ஸ்' பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

புற்று செல்களை கண்டறியும் `3டி' கேமரா........

டாவின்சி ரோபோவில் 3டி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரோபோ புரோஸ்டேட் பகுதியில் உள்ள கிளான்டை சரிசெய்கிறது. டாவின்சி ரோபோவில் அறுவை சிகிச்சைக்கான புரோகிராம் எதுவும் முன்கூட்டியே செய்யப்படுவதில்லை. ரோபோவே சிறுநீரக கிளான்டில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை 3டி கேமரா மூலம் கண்டறிந்து, அதற்கு ஏற்ற வகையில் ஆபரேசன் செய்கிறது.

சிறுநீரக புரோஸ்டேட் புற்றுநோய் பாதித்தவர்களுக்கு டாவின்சி ரோபோ வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். புரோஸ்டேட் பகுதியில் உள்ள அனைத்து புற்றுநோய் செல்களையும் இது துல்லியமாக அகற்றி யாவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. ரோபோ செய்யும் ஆபரேசனை சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள் அருகில் உள்ள கம்ப்யூட்டர் மூலம் கண்காணிப்பர். இதனால் ரோபோ தவறு செய்ய வாய்ப்பே கிடையாது.

இதனால் தான் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு ரோபோவை அதிகம் பயன்படுத்துகிறோம் என்கிறார் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையை சேர்ந்த சிறுநீரக ரோபோ அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரமேஷ். இவர் அமெரிக்காவின் அமைந்துள்ள ரோஸ்வெல்பார்க் புற்றுநோய் நிறுவனத்தில் ரோபோ அறுவை சிகிச்சைக்கான சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum