மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
Page 1 of 1
மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
இதய மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதைப் போன்று மருத்துவ உலகின் அதிநவீன மாற்றங்களின் ஒரு முயற்சியாக நியூயார்க்கில் 30 வயதான ஒரு பெண்ணுக்கு மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதேபோன்றதொரு மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சையை கடந்த 2005ஆம் ஆண்டில் டாக்டர் எரிக் ஜென்டன் வெற்றிகரமாக செய்தார். இதுபற்றி அவர் கூறுகையில், இந்த அறுவை சிகிச்சை தொழில்நுட்பம் உத்தரவாதம் மிக்கது என்றார்.
மூச்சுக்குழல் வழங்குவதற்கான ந்பர் இருப்பின், அந்த சிகிச்சை தேவைப்படுபவருக்கு பொருத்த முடியுமென்று குறிப்பிட்டார்.
2005ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது, வழங்குபவர் மற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்பவர் இருவரின் திசுக்களும் பயன்படுத்தப்பட்டன.
தற்போது அதேபோன்றதொரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
பார்சிலோனாவில் வாழும் கொலம்பியாவைச் சேர்ந்த 30 வயதான கிளாடியா கேஸ்டிலோ என்ற பெண்ணுக்கு பல ஆண்டுகளாக எலும்புருக்கி நோய் எனப்படும் ட்யூபர்குளோசிஸ் பாதிப்பு இருந்தது.
2 குழந்தைகளுக்குத் தாயான கேஸ்டிலோவின் இடதுபுற நுரையீரல் கடந்த மார்ச் மாதத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்து மூச்சுக்குழல் பாதிப்பை சரி செய்து வந்தார். இதனால் அவரால் குழந்தைகளை பார்த்துக் கொள்ள முடியாத நிலை உருவானது.
முதலில் அந்தப் பெண்ணின் இடப்புற நுரையீரலை நீக்கிவிட டாக்டர்கள் முடிவெடுத்தனர். ஆனால் பார்சிலோனாவைச் சேர்ந்த தொண்டை நோய் அறுவை சிகிச்சை நிபுணரான பாவ்லோ மச்சியாரினி, மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று பரிந்துரைத்தார்.
இதற்காக மூச்சுக்குழல் வழங்குவோர் கிடைத்தவுடன் டாக்டர்கள், அந்த மூச்சுக்குழலை இணைக்கும் திசுக்களை மட்டும் விட்டுவிட்டு, எஞ்சிய திசுக்களை அழித்தனர்.
இதேபோல் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர்கள் கேஸ்டிலோவின் இடுப்பில் இருந்து எடுக்கப்பட்ட எலும்பில் இருந்து திசுக்களை உருவாக்கி, அவற்றை பெருக்கி, புதிய மூச்சுக்குழலைச் சுற்றிலும் வளரச் செய்து அறுவை சிகிச்சைக்கு தயார் படுத்தியுள்ளதாக மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்ட தகவல் தெரிவிக்கிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
» முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
» முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமா?
» பிரிட்டனின் முதலாவது கை-மாற்று அறுவை சிகிச்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum