தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினியின் அறிவுரையால் குழப்பத்தில் அனிருத்

Go down

ரஜினியின் அறிவுரையால் குழப்பத்தில் அனிருத்  Empty ரஜினியின் அறிவுரையால் குழப்பத்தில் அனிருத்

Post  ishwarya Mon May 27, 2013 6:04 pm

கொலவெறி இசையமைப்பாளர் அனிருத், ரஜினிகாந்த் சினிமா குறித்து கூறிய அறிவுரையால் குழப்பத்தில் காணப்படுகிறார். சிலர் அனிருத்தை தனுஷ் மாதிரி பெரிய கதாநாயகனாகி விடலாம் என்று குழப்பிவிட்டதன் எதிரொலியாக அவரும் கதாநாயகனாக நடிக்க மனதில் ஆசையை வளர்த்துக் கொண்டு வாய்ப்பு கேட்டு அலைந்தார். சிலர் யோசித்த போதும், ஒரு பட நிறுவனம் அவரை கதாநாயகனாக வைத்து படம் பண்ண தயாராகிவிட்டது.

அதற்கான கதை விவாதமும் சீரியசாக நடந்து கொண்டிருக்கிறார். இதையடுத்து முன்னணி கதாநாயகர்களின் திகதி கேட்டு நொந்து போன மேலும் சில உதவி இயக்குனர்களும் அனிருத்தை முற்றுகையிட தொடங்கி விட்டனர். இதனால் தலைகால் புரியாமல் இருந்தார் அனிருத். ஆனால், இந்த தகவல் எப்படியோ ரஜினியின் காதுகளை எட்டி விட்டதாம்.

அதனால் உடனே அனிருத்தை அழைத்து, சினிமாவில் நாம ஆசைப்படுவதை விட, சினிமா நம்மை எந்த பாதையில் கூட்டிச்செல்ல ஆசைப்படுகிறது என்பது தான் முக்கியம். அந்த வகையில், இசை என்ற பாதையில் தான் சினிமா உன்னை அழைத்து செல்கிறது. ஆனால் நீ வேறு பாதையில் செல்ல ஆசைப்படுகிறாய். இது உன் எதிர்காலத்தை வீணடித்து விடும்.

அதனால், தேவையில்லாமல் நடிப்பு ஆசையில் மனதை அலைய விடாமல், இசையில் மட்டும் கவனம் செலுத்து. உனக்கு இருக்கிற திறமைக்கு நீ பெரிய இசையமைப்பாளராய் வருவாய் என்றாராம். ரஜினியின் இந்த அனுபவ அறிவுரை அனிருத்திற்கு வேப்பங்காயாக இருந்தாலும், அவர் சொன்னது அத்தனையும் யதார்த்தம் என்பதால், கதாநாயகனாக நடிப்பதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் காணப்படுகிறார் அனிருத்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum