தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குழப்பத்தில் இருக்கும் சமந்தா.

Go down

குழப்பத்தில் இருக்கும் சமந்தா. Empty குழப்பத்தில் இருக்கும் சமந்தா.

Post  ishwarya Sat May 25, 2013 2:46 pm

கொலிவுட்டில் கெளதம்மேனன் இயக்கிய நீதானே என் பொன்வசந்தம் படத்தில் ஜீவாவுடன் நடித்த சமந்தாவுக்கு அப்படம் வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் தெலுங்கில் நானியுடன் நடித்த இப்படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளது.

இதனால் தமிழில் வாய்ப்பு குறைந்ததால், தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்திருந்தார்.

ஆனால் தோல் அலர்ஜி காரணமாக சில மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால், தெலுங்கில் ஒப்பந்தம் செய்த படத்தின் முன்பணத்தினை திரும்ப செலுத்தியுள்ளார்.

அப்போது தவறவிட்ட படங்களையும், பணத்தையும் இப்போது மொத்தமாக பெற வேண்டும் என்பதற்காக யார் கேட்டாலும் நடித்துத் தருகிறேன் என்று கதையை கேட்டு சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவரது வார்த்தையை நம்பி சில படாதிபதிகள் படப்பிடிப்புக்கு திகதி குறித்து விட்டு, சமந்தாவுக்கு தெரியப்படுத்தியபோது, அவர்கள் சொன்ன திகதியில் தான் வேறு சில படப்பிடிப்புகளில் இருப்பதாக கூறி குழப்பியிருக்கிறார்.

இப்படி இரண்டு படாதிபதிகளை படாதபாடு படுத்தியிருக்கிறார் சமந்தா. இதன் காரணமாக அவர்களுக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.

இதனால் எங்களுக்கு மொத்த கால்சீட் கொடுத்து நடித்துத் தர வேண்டும். இல்லையேல் நஷ்டஈடு தர வேண்டும் என்று சமந்தாவுக்கு கெடு விதித்திருக்கிறார்கள் படாதிபதிகள்.

படாதிபதிகளை குழப்பிய சமந்தா, தற்போது இந்த பிரச்சினையில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது புரியாமல் குழப்பத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum