தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படுசுவாரஸ்யமாக உருவாகும் தீயா வேலை செய்யணும் குமாரு.

Go down

படுசுவாரஸ்யமாக உருவாகும் தீயா வேலை செய்யணும் குமாரு. Empty படுசுவாரஸ்யமாக உருவாகும் தீயா வேலை செய்யணும் குமாரு.

Post  ishwarya Sat May 25, 2013 1:31 pm

வெற்றிக்கூட்டணி UTV மற்றும் சுந்தர்.சி மீண்டும் இணையும் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் சித்தார்த், ஹன்சிகா நடிக்கிறார்கள்.

ரசிகர்கள் அனைவரின் மனதையும் கவரும் விதமாக "உள்ளத்தை அள்ளிதா" முதல் "கலகலப்பு" வரை தனித்தன்மை பெற்று விளங்குபவர் சுந்தர்.சி UTV-உடன் இணைந்து உருவான "கலகலப்பு" வெற்றிக்கு பின் மீண்டும் "தீயா வேலை செய்யணும் குமாரு" மூலம் இணைகிறார்கள்.

குடும்பம், காதல், கொமடி என ஒவ்வொரு குடும்பத்தையும் கலகலக்க செய்யும் சுந்தர்.சி. இப்படத்திலும் அதை மீண்டும் நிரூபிக்க வருகிறார்.

காதலித்து திருமணம் செய்யும் பரம்பரையில் வந்த நாயகனுக்கு மட்டும் காதலி கிடைப்பது முடியாத விடயமாகி போகிறது.

IT - கம்பெனியில் வேலைசெய்யும் அவனுக்கு காதலிக்க துணைபுரிகிறான் நண்பன். காதலி வந்தாள் ஆனால் காதல் செட் ஆனதா என்பது மீதி கதை.

படுசுவாரஸ்யமாக அமைந்துள்ள இக்கதையின் நாயகனாக சித்தார்த் முதன்முறையாக சுந்தர்.சி கூட்டணியில் இணைந்துள்ளார்.

சித்தார்த் நண்பனாக சந்தானம் நடிக்க ஹன்சிகா காதலியாக நடிக்கிறார். மேலும், கணேஷ்வெங்கட்ராம், ஜெனிபர், வித்யு மோகன்ராம், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சித்ரா லட்சுமணன், பாஸ்கி, FM.பாலாஜி, ஜார்ஜ், விச்சு மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

சென்னை, கும்பகோணம், ஐதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இரண்டு பாடல்கள் ஜப்பானில் படமாக்கப்படுகிறது. மே மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:

இயக்குனர் - சுந்தர்.சி
இசை - சத்யா
ஒளிப்பதிவு - கோபி அமர்நாத்
கலை - பொன்ராஜ்
பாடல்கள் - பா.விஜய்
இணை இயக்குனர் - வெங்கட்
நடனம் - பிருந்தா
எடிட்டிங் - பிரவின் - ஸ்ரீகாந்த்
தயாரிப்பு, மேற்பார்வை - பி.பாலகோபி
தயாரிப்பு - AVNI CINEMAX AND UTV

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum