தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஷாலின் பாண்டிநாடு! லட்சுமி மேனன் ஹீரோயின் .

Go down

விஷாலின் பாண்டிநாடு! லட்சுமி மேனன் ஹீரோயின் . Empty விஷாலின் பாண்டிநாடு! லட்சுமி மேனன் ஹீரோயின் .

Post  ishwarya Sat May 25, 2013 12:02 pm

நடிகர் விஷால் சொந்தமாக தயாரிக்கும் படத்திற்கு பாண்டிநாடு என்று பெயர் வைத்துள்ளனர். இதில் ஹீரோயினாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மதகஜராஜா, பட்டத்து யானை படங்களில் நடித்து வரும் விஷால், அடுத்தப்படியாக சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து, நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ள விஷால், தான் தயாரிக்கும் முதல்படத்தில் அவரே ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல படங்களின் டைரக்டர் சுசீந்திரன் இயக்குகிறார். மதுரையை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட உள்ளது. இதனால் படத்திற்கு பாண்டிநாடு என்று பெயர் வைத்துள்ளனர். படத்தின் ஹீரோயினாக லட்சுமி மேனனை நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வந்த வேளையில், இப்போது அவரே ஹீரோயினாக தேர்வாகியுள்ளார்.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான விஷால் கூறுகையில், இருதினங்களுக்கு முன்னர் தான் லட்சுமி மேனனை தேர்வு செய்தோம். படத்தின் கதைக்களம் மதுரை ‌என்பதால் அந்த சாயலில் ஹீரோயின் இருக்க வேண்டும் என எண்ணினோம். ஏற்கனவே சுந்தரபாண்டியனில், லட்சுமி மேனனுக்கு அந்த சாயல் பொருந்தியிருந்ததால் லட்சுமி மேனனை தேர்வு செய்தோம். மே 14 முதல் பாண்டிநாடு ஷூட்டிங் தொடங்குகிறது என்று கூறியுள்ளார்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum