அறுவை சிகிச்சை - ஆத்திரத்தில் லட்சுமி மேனன்
Page 1 of 1
அறுவை சிகிச்சை - ஆத்திரத்தில் லட்சுமி மேனன்
சுந்தரபாண்டியன் தந்த சௌந்திரவதி லட்சுமி மேனன். பாந்தமான அழகுடன் நடிப்பும் நன்றாக வருகிறது இவருக்கு. இதனால் கோடம்பாக்கத்தின் திடீர் விஐபி ஆகியிருக்கிறார். மரம் பழுத்தால் கல்லடியும் இருக்கும்தானே.
லட்சுமி மேனனின் முகத்தில் சின்னதாக தழும்பு ஒன்று உள்ளது. இந்த தழும்புதான் உங்க பிளஸ் என்று சிலரும், தழும்பை அகற்றினால் இன்னும் அழகு துலங்கும் என்று வேறு சிலரும் தழும்பை வைத்து அலும்பு செய்து வருகிறார்கள். சிலர் ஒருபடி மேலே சென்று பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் லட்சுமி மேனன் தனது தழும்பை அகற்றினார் என்றே எழுதினர்.
இதற்கு மேலும் சும்மாயிருந்தால் தழும்பை வைத்து அரசியல் கட்சி தொடங்கிவிடுவார்கள் என்று தனது கடுகடு மறுப்பை தெரிவித்துள்ளார். சின்ன வயதில் உண்டான அந்தத் தழும்பை அறுவை சிகிச்சை செய்து அகற்றும் எண்ணம் எதுவும் எனக்கில்லை. தழும்பு அப்படியேதான் இருக்கப் போகிறது என்றிருக்கிறார் கறாராக.
ஆக, தழும்பை அழகாக பார்க்கிறவர்கள் மட்டும் லட்சுமி மேனனை அணுகவும்.
சுந்தரபாண்டியன், லட்சுமி மேனன்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இதய நோய்களுக்கு இனி அறுவை சிகிச்சை தேவை இல்லை :புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு!
» ஷாருக்கானுக்கு அறுவை சிகிச்சை
» மனிஷா கொய்ராலாவுக்கு அறுவை சிகிச்சை தள்ளிப்போடப்பட்டது
» கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
» ஷாருக்கானுக்கு அறுவை சிகிச்சை
» மனிஷா கொய்ராலாவுக்கு அறுவை சிகிச்சை தள்ளிப்போடப்பட்டது
» கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum