சுஷ்மிதா சென்னுக்கும் எனக்கும் திருமணமா? வாசிம் அக்ரம் மறுப்பு!
Page 1 of 1
சுஷ்மிதா சென்னுக்கும் எனக்கும் திருமணமா? வாசிம் அக்ரம் மறுப்பு!
பாலிவுட் ஹீரோயின் சுஷ்மிதா சென்னுக்கும் தனக்கும் திருமணம் என்று ஊடகங்கள் பேசுவது மிகவும் தவறானது இத்தோடு இது போன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும் தற்போதைய கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளருமான வாசிம் அக்ரம் கேட்டுக் கொண்டுள்ளார்.
1994ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற சுஷ்மிதா சென் மற்றும் வாசிம் அக்ரம் ஆகிய இருவரும் 2008ஆம் ஆண்டு நடன ஷோ ஒன்றில் நீதிபதிகளாக இணைந்து பணியாற்றினார்.
அப்போதிலிருந்தே இருவரையும் இணைத்து பேசி வந்தன ஊடகங்கள். மேலும் வாசிம் அக்ரமின் மனைவி அக்டோபர் 2009-இல் காலமானார். இந்த நிலையில் சுஷ்மிதா சென் மற்றும் தன்னை இணைத்துப் பேசுவதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று கூறியுள்ளார் வாசிம்.
"எனக்கு மறுத்து மறுத்து களைப்பாகிவிட்டது. இப்போது கூறுகிறேன், போதும் முற்றுப்புள்ளி வையுங்கள்" என்றார் வாசிம் அக்ரம்.
ஷோயப் மாலிக், சானியா மிர்சா பொன்று மற்றுமொரு எல்லை கடந்த உயர்ந்த இட திருமணம் ஒன்று விரைவில் நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் ஊடகமும் வதந்தியில் இணைந்து கொள்ள கடுப்பானார் வாசிம் அக்ரம்.
நான் பார்த்ததிலேயே மிகவும் நாகரிகமான பெண் சுஷ்மிதா சென், அவருடன் இணைந்து நீதிபதியாக பணியாற்றியது ஒரு பெரும் அனுபவம், அவர் மிகவும் தொழில் பூர்வமான விஷயம் தெரிந்த நபராவார்.
எங்கள் இருவருக்கும் தனித் தனியான வாழ்க்கை இருக்கிறது. அதனை மதிக்கவேண்டும். இவ்வாறு கூறினார் வாசிம் அக்ரம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தொழில் அதிபருடன் திருமணமா? – திரிஷா மறுப்பு
» பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமுடன் திருமணம் இல்லை: சுஷ்மிதா சென்
» எனக்கும் சமந்தாவுக்கு திருமணமா? மறுக்கிறார் சித்தார்த்
» கட்டாய திருமணமா? - நடிகை மறுப்பு
» மகள் இலக்கியாவுக்கு ரகசிய திருமணமா? – டி.ஆர் மறுப்பு
» பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமுடன் திருமணம் இல்லை: சுஷ்மிதா சென்
» எனக்கும் சமந்தாவுக்கு திருமணமா? மறுக்கிறார் சித்தார்த்
» கட்டாய திருமணமா? - நடிகை மறுப்பு
» மகள் இலக்கியாவுக்கு ரகசிய திருமணமா? – டி.ஆர் மறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum