தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கட்டாய திருமணமா? - நடிகை மறுப்பு

Go down

கட்டாய திருமணமா? - நடிகை மறுப்பு Empty கட்டாய திருமணமா? - நடிகை மறுப்பு

Post  ishwarya Thu Mar 07, 2013 11:54 am

மயக்கம் என்ன படத்தில் நடித்த பிரபல போட்டோகிராஃபர் சுந்தர் நடிகை ‌ரிச்சாவை கட்டாயத் திருமணத்துக்கு வற்புறுத்துவதாக வந்த செய்தியை சம்பந்தப்பட்ட இருவரும் மறுத்துள்ளனர்.

மயக்கம் என்ன படத்தில் சுந்தரும், ‌ரிச்சாவும் காதலர்களாக நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு, ‌ரிச்சா சென்னை வரும் போது விமான நிலையத்தில் சுந்தர் அவரை பிக்கப் செய்வது, ட்ராப் செய்வது என்று வளர்ந்தது.

‌ரிச்சாவுக்கு தற்போது தமிழில் படங்களில்லை. தெலுங்கில் சில வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் சுந்த‌ரின் முதல்பட வாய்ப்புடன் நடிப்புக்கான திசைகள் அடைந்துவிட்டன. இது ‌ரிச்சாவுக்கு ஏமாற்றத்தை தந்ததாகவும், அவர் சுந்தரைவிட்டு விலக ஆரம்பித்தார் எனவும், இதனை உணர்ந்து கொண்ட சுந்தர் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி ‌ரிச்சாவை வற்புறுத்தியதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதனை ‌ரிச்சா, சுந்தர் இருவருமே பிரபல ஆங்கில நாளிதழில் மறுத்துள்ளனர்.

என்னை யாரும் வற்புறுத்தவும் இல்லை, வற்புறுத்தவும் முடியாது என்று ‌ரிச்சா கூறியுள்ளார். நாங்க நல்ல நண்பர்கள், ‌ரிச்சாவுடன் தொடர்பு கொண்டு இரண்டரை மாதங்களுககு மேல் ஆகிறது என சுந்தர் தெ‌ரிவித்துள்ளார்.
மயக்கம் என்ன சுந்தர், ரிச்சா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மகள் இலக்கியாவுக்கு ரகசிய திருமணமா? – டி.ஆர் மறுப்பு
» தொழில் அதிபருடன் திருமணமா? – திரிஷா மறுப்பு
» சுஷ்மிதா சென்னுக்கும் எனக்கும் திருமணமா? வாசிம் அக்ரம் மறுப்பு!
» நடிகர் சுந்தர் கட்டாய திருமணத்துக்கு என்னை வற்புறுத்தவில்லை: நடிகை ரிச்சா பேட்டி
» முன்னாள் முதல் மந்திரி மகனுடன் நடிகை ஜெனிலியா ரகசிய திருமணமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum