தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமுடன் திருமணம் இல்லை: சுஷ்மிதா சென்

Go down

 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமுடன் திருமணம் இல்லை: சுஷ்மிதா சென்  Empty பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமுடன் திருமணம் இல்லை: சுஷ்மிதா சென்

Post  ishwarya Sat May 04, 2013 4:56 pm

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம். புகழ்பெற்ற வேகப்பந்து வீரரான அவர் தற்போது டெலிவிசன் வர்ணனையாளராக உள்ளார். வாசிம் அக்ரமின் மனைவி ஹூமா 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மரணம் அடைந்தார்.

ஐ.பி.எல். போட்டியில் அவர் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்றினார். இந்த ஆண்டு அந்த பொறுப்பில் இருந்து விலகினார். வாசிம் அக்ரமுக்கும், இந்தி நடிகையும், முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென்னுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்த நிலையில் வாசிம் அக்ரமை சுஷ்மிதா சென் திருமணம் செய்ய முடிவு செய்து இருப்பதாக பரபரப்பான தகவல் வெளியாகி இருந்தது. இதை சுஷ்மிதா சென் மறுத்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டர் இணைய தளத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

வாசிம் அக்ரமை நான் திருமணம் செய்து கொள்ள போவதாக வெளியான தகவல் வதந்தியே இது முட்டாள் தனமானது. வாசிம் அக்ரம் எப்போதுமே எனக்கு நல்ல நண்பர். இது மாதிரியான வதந்திகள் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளன.

இவ்வாறு சுஷ்மிதா சென் கூறியுள்ளார்.

இதே போல வாசிம் அக்ரமும் இந்த தகவலை மறுத்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்வேன் -சுஷ்மிதா சென்
» “நடிகை அனுஷ்காவை திருமணம் செய்ய மாட்டேன்” – கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா
» சுஷ்மிதா சென்னுக்கும் எனக்கும் திருமணமா? வாசிம் அக்ரம் மறுப்பு!
» குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையாக இருக்கிறது – சுஷ்மிதா சென்
» இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் வீரர் சுட்டுக் கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum