எனக்கும் சமந்தாவுக்கு திருமணமா? மறுக்கிறார் சித்தார்த்
Page 1 of 1
எனக்கும் சமந்தாவுக்கு திருமணமா? மறுக்கிறார் சித்தார்த்
எனக்கும் நடிகை சமந்தாவுக்கும் திருமணம் நடக்கவில்லை என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சித்தார்த். இவர் தமிழில் ஒருசில படங்களில் நடித்து வந்தாலும் தெலுங்கு திரையுலகை பொறுத்தவரையில் இன்றைக்கு முன்னணி நடிகர்களில் ஒருவராவார். அண்மை காலமாகவே இவரை பற்றி பல்வேறு கிசுகிசுக்கள் உலா வருகின்றன. அது நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை சமந்தாவின் காதல் பற்றியதுதான். இந்நிலையில் கிசுகிசுவின் உச்சகட்டமாக இப்போது இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று சித்தார்த் மற்றும் சமந்தா ஆகிய இருவரும் கும்பத்துடன் காளஹஸ்தி கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து, புதிதாக திருமணமானவர்கள் நடத்தும் ராகு - கேது பூஜைகளிலும் அவர்கள் பங்கேற்றனர். இதன் காரணமாகவே இருவருக்கும் ரகசியமாக திருமணம் நடைபெற்றிருக்கலாம் என்கிற தகவல் வெளியானது. ஆனால் இதனை நடிகர் சித்தார்த் மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: எனக்கும் சமந்தாவுக்கு இடையே திருமணம் நடந்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை. அது பொறுப்பற்றதனம். மேலும் என்னுடைய திருமணம் முறைப்படி நடக்கும் என்று தெரிவித்தார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுஷ்மிதா சென்னுக்கும் எனக்கும் திருமணமா? வாசிம் அக்ரம் மறுப்பு!
» காளஹஸ்தி கோயிலில் ஜோடியாக வழிபாடு: சமந்தாவுடன் ரகசிய திருமணமா… சித்தார்த் மவுனம்!
» காதல் கிசுகிசுவால் சமந்தாவுக்கு சிக்கல்
» சமந்தாவுக்கு சூடான முத்தம் கொடுத்தாரா ஜீவா?
» சமந்தாவுக்கு பதிலாக நடிக்க 1 கோடி சம்பளம் கேட்ட ஸ்ருதி
» காளஹஸ்தி கோயிலில் ஜோடியாக வழிபாடு: சமந்தாவுடன் ரகசிய திருமணமா… சித்தார்த் மவுனம்!
» காதல் கிசுகிசுவால் சமந்தாவுக்கு சிக்கல்
» சமந்தாவுக்கு சூடான முத்தம் கொடுத்தாரா ஜீவா?
» சமந்தாவுக்கு பதிலாக நடிக்க 1 கோடி சம்பளம் கேட்ட ஸ்ருதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum