தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தொழில் அதிபருடன் திருமணமா? – திரிஷா மறுப்பு

Go down

தொழில் அதிபருடன் திருமணமா? – திரிஷா மறுப்பு Empty தொழில் அதிபருடன் திருமணமா? – திரிஷா மறுப்பு

Post  ishwarya Sat Apr 20, 2013 1:23 pm

தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கிறார் திரிஷா. அஜித்துடன் நடிக்கும் மங்காத்தா படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. தீன்மார், சாவித்திரி போன்ற தெலுங்கு படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடக்கிறது.

இதற்கிடையில் திரிஷாவுக்கும், தொழில் அதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. திருமண ஏற்பாடுகளை இருவீட்டாரும் முனைப்புடன் செய்து வருவதாகவும் கூறப்பட்டது.

இதற்கு திரிஷா மறுப்பு தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் இதுபற்றி அவர் கூறியதாவது:-

தொழில் அதிபர் ஒருவரை நான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் வந்துள்ள செய்திகளை பார்த்து அதிர்ச்சியானேன். அதுமாதிரி எந்த ஏற்பாடும் நடக்கவில்லை. அப்படியொரு எண்ணமே எனக்கு ஏற்படவில்லை. திருமணம் பற்றி இதுவரை நான் யோசித்தது கூட கிடையாது. இதுமாதிரி செய்திகளை யார்தான் பரப்பி வருகிறார்கள் என்று தெரியவில்லை. ஏற்கனவே ஒரு பிரபலத்துடன் என்னை இணைத்து செய்தி வந்தது. அவரை திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்றும் கூறினார்கள்.

பிறகு அது பொய் என்று நிரூபணம் ஆனது. அதுபோல்தான் இப்போதும் இந்த வதந்தி பரவியுள்ளது. இதுபோல் அடிக்கடி வருகின்றன. அவற்றை நான் பொருட்படுத்துவது இல்லை. எனது முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. திரையுலகில் நிறைய சாதிக்க வேண்டும். அதற்காக உழைத்துக் கொண்டு இருக்கிறேன். என்னைப்பற்றி பரவும் வதந்திகளை ரசிகர்கள் நம்ப மாட்டார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum