சமையல் குறிப்பு => கோதுமை ரவா அடை
Page 1 of 1
சமையல் குறிப்பு => கோதுமை ரவா அடை
தேவையானப்பொருட்கள்:
கோதுமைரவா - 1 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு- 1 டீஸ்பூன் அல்லது தேவைக் கேற்றவாறு
வெங்காயம் - 1
கறிவேப்பிலை – சிறிது
நல்லெண்ணை – தேவையான அளவு
செய்முறை:
பருப்புகள் அனைத்தையும்தண்ணீரில் 2 முதல் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
கோதுமை ரவாவை, அது மூழ்கும் அளவி ற்கு தண்ணீரைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.
பருப்புகள் ஊறியபின்னர், நன்றாகக்கழுவி, தண்ணீரை வடித்துவிட் டு , அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற் றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத் துக் கொள்ளவும்.
அரைத்த மாவுடன், ஊற வைத்துள்ள கோதுமை ரவாவைச் சேர்த்து கலக்கவும்.
கறிவேப்பிலை, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி மாவில் சேர் க்கவும். தேவை ப்பட்டால், சிறிது தண்ணீரைச்சேர்த்து, தோசைமா வைவிட சற்று கெட்டியாகக்கரைத்துக் கொள்ளவும். உப்பு சரிபார்த் து, தேவை யானால் இன்னும் சிறிது உப்பைச் சேர்க்க லாம்.
தோசைக்கல்லை காயவைத்து, சூடானதும், எண்ணைத் தடவி ஒரு பெரிய குழிக்கரண்டி மாவை நடுவில் ஊற்றி பரப்பி விடவும். அடை யைச் சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு, மறு புறமும் சிவக்க வெந்ததும் கல்லிலிருந்து எடுத்து வைக்கவும். விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இன்றைய சமையல் சீரக சாதம் – சமையல் குறிப்பு
» சமையல் குறிப்பு : வாழைப்பூ வடை
» காய்கறி வடை – சமையல் குறிப்பு
» சமையல் குறிப்பு : மரக்கறிக்காய் தோசை
» புதினா சப்பாத்தி – சமையல் குறிப்பு
» சமையல் குறிப்பு : வாழைப்பூ வடை
» காய்கறி வடை – சமையல் குறிப்பு
» சமையல் குறிப்பு : மரக்கறிக்காய் தோசை
» புதினா சப்பாத்தி – சமையல் குறிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum