தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமையல் குறிப்பு : வாழைப்பூ வடை

Go down

சமையல் குறிப்பு : வாழைப்பூ வடை Empty சமையல் குறிப்பு : வாழைப்பூ வடை

Post  ishwarya Wed May 08, 2013 12:46 pm

இயற்கையின் படைப்புகளில் வாழைப்பூ மிகவும் அற்புதமானது. எண்ணற்ற மருத்துவக் குணங்களை கொண்ட இந்த வாழைப்பூ கொண்டு மிகவும் வித்தியாசமான வாழைப்பூ வடை செய்வது எப்படி என்று தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.


தேவையான பொருட்கள் :

வாழைப்பூ - 2 கைப்பிடி அளவு
பெரிய வெங்காயம் - 1
துவரம்பருப்பு - அரை கப்
காய்ந்த மிளகாய் - 12
சோம்பு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
மல்லித்தழை சிறிது - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

வாழைப்பூவை நரம்பை எடுத்து சுத்தம் செய்யவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
துவரம் பருப்பை ஊறவைத்துப் அரைகுறையாக அரைத்துக் கொள்ளவும்.
காய்ந்த மிளகாய் + சோம்பு + சீரகம் + உப்பு ஆகியவற்றை லேசாக தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்கவும்.
வாழைப்பூவை அம்மியில் வைத்து, ஒன்றிரண்டாக அரைத்து, அதன் துவர்ப்பு போக, நன்றாகப் பிழிந்துவிடவும்.
அத்துடன் அரைத்த விழுது + பருப்புக் கலவையைக் கலந்து வெங்காயம் + பொடியாக நறுக்கிய மல்லித்தழை + கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்துப் பிசையவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பிசைந்த மாவை சிறு வடைகளாகத் தட்டி, பொன்னிறமாக வேகவைக்கவும். ருசியான வாழைப்பூ வடை ரெடி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum