காலிபிளவர் மசாலா கேழ்வரகு தோசை
Page 1 of 1
காலிபிளவர் மசாலா கேழ்வரகு தோசை
தேவையான பொருட்கள்.....
கேழ்வரகு மாவு - 1 கப்
அரிசி மாவு - அரை கப்
உளுந்து - அரை கப்
மசாலாவுக்கு....
காலிபிளவர் - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 1
மிளகாய் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - தேவையான அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை....
• உளுந்தை 4 மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
• முதல் நாள் இரவே கேழ்வரகு மாவு,அரிசி மாவு, அரைத்த உளுந்து, உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்
• தக்காளி, வெங்காயம்,கொத்தமல்லி தழை, காலிபிளவரை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி போட்டு வதக்கிய பின்னர் காலிபிளவர் சேர்த்து வேகும் வரை வதக்கவும்.
• வெந்ததும் மிளகாய் தூள், மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
• அடுப்பில் தோசை கல்லை வைத்து அதில் முதல் நாள் இரவில் கலந்து வைத்த மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி மேலே மூடி வைக்கவும்
• வெந்ததும் தோசையின் நடுவே காலிபிளவர் மசாலாவை வைத்து இரண்டாக மடித்து பரிமாறவும்
• சத்தான, சுவையான காலிபிளவர் மசாலா கேழ்வரகு தோசை ரெடி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum