திருச்செந்தூர் கோயிலில் மாசி திருவிழா துவங்கியது 25ம் தேதி தேரோட்டம்
Page 1 of 1
திருச்செந்தூர் கோயிலில் மாசி திருவிழா துவங்கியது 25ம் தேதி தேரோட்டம்
திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 2.30 மணிக்கு தீபாராதனை நடந்தது. 4 மணிக்கு பல்லக்கில் கொடிபட்டம் திருவீதி உலா சென்று கோயிலுக்கு வந்ததும் சிறப்பு பூஜை நடந்தது. காலை 5.15 மணிக்கு சந்தோஷ்குமார் பட்டர் கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன.மாலை 4 மணிக்கு தங்க சப்பரத்தில் அப்பர்சுவாமி உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு ஸ்ரீபெலிநாயகர் அஸ்திரதேவருடன் தந்த பல்லக்கில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக வரும் 25ம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டமும் மறுநாள் 26ம் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது. 27ம் தேதி விழா நிறைவுபெறுகிறது. விழாவையொட்டி தினமும் பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மாசி மகா சிவராத்திரி திருவிழா : ராமேஸ்வரத்தில் தேரோட்டம்
» 26ம் தேதி தேரோட்டம் பங்குனி உத்திர திருவிழா பழநியில் கொடியேற்றம்
» திருச்செந்தூர் மாசிதிருவிழா நாளை தேரோட்டம்
» தைப்பூசத் திருவிழா துவங்கியது
» சிவ கோஷங்கள் முழங்க கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்
» 26ம் தேதி தேரோட்டம் பங்குனி உத்திர திருவிழா பழநியில் கொடியேற்றம்
» திருச்செந்தூர் மாசிதிருவிழா நாளை தேரோட்டம்
» தைப்பூசத் திருவிழா துவங்கியது
» சிவ கோஷங்கள் முழங்க கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum