மாசி மகா சிவராத்திரி திருவிழா : ராமேஸ்வரத்தில் தேரோட்டம்
Page 1 of 1

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சுவாமி, அம்பாள் தேரோட்டம் நேற்று காலை நடந்தது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவின் 9ம் நாளான நேற்று அதிகாலை 4 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு ஸ்படிக லிங்க பூஜை நடந்தது. அதன்பிறகு கால பூஜைகளைத் தொடர்ந்து காலை 9.20 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் அலங்கரிக்கப் பட்ட தேர்களில் எழுந்தருளினர். விநாயகர், முருகன், சுவாமி அம்பாள். சண்கேஸ்வரர் தேர்களுக்கு சிறப்பு தீபாராதனைகள் செய்யப்பட்டன.
இதையடுத்து கோயில் தக்கார் ராஜாகுமரன் சேதுபதி, இணை ஆணையர் செல்வராஜ் சுவாமி, அம்பாள் தேரின் வடத்தை காலை 10 மணிக்கு இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். பக்தர்கள் ஏராளமானோர் சிவ, சிவ கோஷங்களுடன் தேரை இழுத்தனர். நான்கு ரத வீதியில் உலா வந்து சுவாமி, அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நண்பகல் 11 மணிக்கு தேர்கள் மீண்டும் நிலையை வந்தடைந்ததும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிவராத்திரியை முன்னிட்டு நேற்று பகல் முழுவதும் கோயில் நடை திறக்கப்பட்டதால் பக்தர்கள் நாள் முழுவதும் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்தனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருச்செந்தூர் கோயிலில் மாசி திருவிழா துவங்கியது 25ம் தேதி தேரோட்டம்
» பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங
» மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா தேரோட்டம்
» திருச்செந்தூரில் பிப்.16-ல் மாசி திருவிழா துவக்கம்
» 26ம் தேதி தேரோட்டம் பங்குனி உத்திர திருவிழா பழநியில் கொடியேற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum