சிவ கோஷங்கள் முழங்க கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்
Page 1 of 1

சென்னை: ‘‘தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவருக் கும் இறைவா போற்றி’’ என்று சிவ கோஷங்கள் முழங்க கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நேற்று நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்தனர். சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கடந்த 17ம் தேதி கோலவிழியம்மனுக்கு அபிஷேகத்துடன் தொடங்கியது. 18ம் தேதி கொடியேற்றமும், 19ம் தேதி சூரிய வட்டம், சந்திரவட்டமும், 20ம் தேதி அதிகார நந்தி காட்சியளித்தலும், 21ம் தேதி புருஷா மிருகமும், 22ம் தேதி சவுடல் விமானமும், 23ம் தேதி பல்லக்கும் நடந்தது. தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது.
இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று நடந்தது. தேரோட்டத்தையொட்டி கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் காலை 7 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். சர்வ அலங்காரத்தில் இருந்த சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 9.01 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடந்தது. முன்னதாக சிறிய தேரில் விநாயகர் எழுந்தருளி தேரோட்டத்துக்கு முன்னிலை வகித்தார். தொடர்ந்து கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் பெரிய தேர் புறப்பட்டது. அதையடுத்து வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் தேர் உள்பட மொத்தம் 5 தேர்கள் புறப்பட்டன.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேர்களை வடம் பிடித்தனர். மங்கள வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க தேர் புறப்பட்டபோது கூடியிருந்த பக்தர்கள் ‘‘ தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவருக் கும் இறைவா போற்றி....’’ ‘நமச்சிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க...’’ என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். தொடர்ந்து மாட வீதிகளில் திருத்தேரில் எழுந்தருளி இறைவன்அருள் பாலித் தார். திருத்தேர் மதியம் 1.30 மணியளவில் நிலைக்கு வந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து தேரிலிருந்து திருக்கோயிலுக்கு இறைவன் எழுந்தருளினார்.
திருத்தேரோட்டத்தை முன்னிட்டு மயிலாப்பூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கோயில் மற்றும் கோயில் திருக்குள தடத்தில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந் தன. தேர்களுக்கு பாதுகாப்புக்காக பொக்லைன் மற்றும் கிரேன் இயந்திரங்கள் உடன் சென்றன. கோயிலின் அனைத்து பகுதிகளிலும் கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான திருவிழாக்கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியதால் மயிலையில் எங்கு திரும்பினாலும் நெரிசல் காணப்பட்டது.
தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், சைவ சமயத்தார் போன்றோர் பல இடங்களில் நீர் மோர், பானகம், அன்னதானம் வழங்கினர். தே ரோட்டத்தால் மயிலாப்பூர் களை கட்டியிருந்தது. மல்லிகேஸ்வரர் கோயில்: சென்னை லிங்கி செட்டித்தெரு முத்தியால் பேட்டைமரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. காலை 7.30 மணிக்கு மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரர் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு 8.30 மணிக்கு தேரோட்டம் புறப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். அதேபோல திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், உள்ளிட்ட பல கோயில்களில் தேரோட்டம் நடந்தது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் இன்று மாலை அறுபத்து மூவர் விழா
» மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தேரோட்டம்
» சுசீந்திரம் கோயிலில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum