26ம் தேதி தேரோட்டம் பங்குனி உத்திர திருவிழா பழநியில் கொடியேற்றம்
Page 1 of 1
26ம் தேதி தேரோட்டம் பங்குனி உத்திர திருவிழா பழநியில் கொடியேற்றம்
பழநி: பழநி தண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 26ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி நேற்று காலை 11.20 மணிக்கு மேல் 12 மணிக்குள் மிதுன லக்கினத்தில் திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. புண்ணிய நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் கொண்ட கலசங்கள், வாத்தியப் பொருட்கள் ஆகியவற்றுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டன. வேல், மயில், சேவல், வளர்பிறை நிலவு, சூரியன், மணி மற்றும் பூஜைப் பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறத்தினாலான கொடி பக்தர்களின் அரோகரா கோஷங்கள் முழங்க கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 25ம் தேதி நடைபெறுகிறது. பங்குனி உத்திர தேரோட்டம் 26ம் தேதி நடைபெறுகிறது. அன்று முத்துகுமாரசாமி தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 4.35 மணிக்கு கிரிவீதிகளில் தேரோட்டமும் நடைபெறும்.விழாவை முன்னிட்டு 24ம் தேதியில் இருந்து 28ம் தேதி வரை தங்க ரதம் புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பழநியில் பங்குனி உத்திர விழா இன்று மாலை தேரோட்டம்
» பழநியில் பங்குனி உத்திர விழா இன்று மாலை தேரோட்டம்
» சபரிமலை கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றம்
» சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
» பழனியில் பங்குனி உத்திர தேரோட்டம்: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum