தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒருநாள் தரிசனக்கோயில்கள்

Go down

ஒருநாள் தரிசனக்கோயில்கள் Empty ஒருநாள் தரிசனக்கோயில்கள்

Post  ishwarya Thu May 23, 2013 4:54 pm

இறை வழிபாட்டில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. ஒரு தலத்துடன் தொடர்புகொண்ட வேறு சில தலங்களுக்கும் சேர்ந்து பாதயாத்திரை செல்வது அவற்றில் ஒருவகை. ஒன்றுக்கொன்று தொடர்புடையதும் புராணத் தொடர்பு, புவி வழித் தொடர்பு கொண்டதுமான திருத்தலத் தொகுப்புகள் சில, நம் தமிழகத்தில் பக்தர்களால் ஏகதின வழிபாடாக தரிசனம் செய்யப்படுகின்றன. அவற்றில் மிகவும் புகழ் பெற்ற பக்தி யாத்திரைகளாக, மக்கள் எல்லாக் காலங்களிலும் சென்று வரக்கூடிய தரிசனத் தலங்கள்...

மணிமுத்தா நதியருகே மகாதேவ தரிசனம்

சேலம் நகரில் உள்ள மணிமுத்தா நதியின் மேற்குக்கரையில் உள்ள சுயம்பு லிங்கத் திருத்தலங்களான சுகவனேஸ்வரர் கோயில், உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோயில், பில்லூக வீரட்டானேஸ்வரர் கோயில், பரமத்தி பீமேஸ்வரர் கோயில், திருவேலிநாதர் கோயில் ஆகியவற்றை ஒரே நாளில் வழிபடு வது மகா புண்ணியத்தைச் சேர்க்கும்.

நலம் சேர்க்கும் நவகயிலாய தரிசனம்

திருநெல்வேலி மாவட்டத்துக்குள் வருகின்ற நவகயிலாயங்களான சேர்ந்தபூமங்கலம், ராசபதி, தென்திருப்பேரை, திருவைகுண்டம், முறப்ப நாடு, குன் னத்தூர், கோடக நல்லூர், சேரன்மாதேவி, பாபநாசம் ஆகிய நவ கயிலாயங்கள் ஒரே நாளில் வழிபடக் கூடிய சிவபுண்ணியத் தலங்களாக விளங்குகின்றன.

நவநிதி உருவாய் நவதிருப்பதி தரிசனம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிகளாகிய ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டைத் திருப்பதி, பெருங்குளம், திருக்கோளூர், தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி ஆகிய பெருமாள் தலங்களை ஏகாதசி திதி நாளிலோ, திருவோணம் நட்சத்திர நாளிலோ, சனி அல்லது செவ் வாய்க்கிழமையிலோ தரிசிப்பது, நமக்கு நவநிதிகளின் அருளைப் பெற்றுத் தரும்.

மகேசனின் மூன்று அருள் வேளை தரிசனம்

திருச்சி மாவட்டத்திலும், புதுக்கோட்டை எல்லையை ஒட்டியும் அமைந்துள்ள மூன்று சிவ புண்ணியத் திருத்தலங்களை, மாத சிவராத்திரி, திருவாதிரை நட்சத்திர நாட்களில் மூன்று காலங்களில் தரிசிப்பதால் சர்வ மங்களங்களும் கைகூடும். காலையில் கடம்பந்துறையில் கடம்பரையும் மதியத்தில் சிவாய மலையில் சொக்கநாதப் பெருமானையும் மாலையில் திருஈங்கோய் மலை ஈஸ்வரனையும் வழிபடல் வேண்டும்.

சக்தியர் மூவரின் அருட்பார்வை தரிசனம்

திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குள் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி வடிவினராய் அருள்மழை பொழியும் சக்தியரை வழிபட நவநாயகர் தோஷம் விலகி, சர்வ அபீஷ்டங்களும் நிறைவேறப் பெறும். காலையில் சென்னை அருகே மேலூரில் (மீஞ்சூர் அருகில்) திருவுடை நாயகியையும் ந ண்பகலில் திருவொற்றியூர் வடிவுடை நாயகியையும் மாலையில் வடதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகியையும் வழிபடுதல் முறையாகிறது.

திருமகள் வடிவாக திரிசக்கர தரிசனம்

காஞ்சிபுர மாவட்ட எல்லையில் தென் சென்னைப் பகுதியான தொண்டை மண்டலத்தில் மூன்று தேவியர்கள் அமர்ந்து, நின்று, வீற்றிருந்த தி ருக்கோலத்தில் அருள் தருகின்றனர். அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற, சர்வ தோஷங்களிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியான வாழ்வைப் பெற பௌர்ணமி, வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை உதய காலத்தில் திருவேற்காடு கருமாரி அம்மனையும், மதியம் மாங்காடு காமாட்சி அம்மனை யும், அடுத்ததாக தென்குன்றத்தூர் (திருமுறைக்காடு) கல்யாண காத்யாயனி அம்மனையும் ஒரே நாளில் தரிசிக்க வேண்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum