தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னையில் ஒருநாள் - சரத்குமரின் விசேஷ ஐடியா

Go down

சென்னையில் ஒருநாள் - சரத்குமரின் விசேஷ ஐடியா Empty சென்னையில் ஒருநாள் - சரத்குமரின் விசேஷ ஐடியா

Post  ishwarya Sat Mar 02, 2013 6:20 pm

மலையாளத்தில் உடல் உறுப்பு தானத்தை மையப்படுத்தி எடுத்த ட்ராஃபிக் பாராட்டுக்களையும், நல்ல வசூலையும் பெற்றது. இதனை தமிழில் சென்னையில் ஒருநாள் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். சரத்குமார், சேரன், பிரசன்னா என நிறைய பேர் நடித்துள்ளனர்.

மூளைச்சாவுக்குப் பின் ஹிதேந்திரன் என்ற இளைஞனின் இதயம் வேறொருவருக்கு எடுத்து பொருத்தப்பட்டது. தமிழகத்தில் நடந்த இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ட்ராஃபிக் படத்தை மலையாளத்தில் உருவாக்கியிருந்தனர்.

இதயத்தை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துச் செல்ல வேண்டும். காரில் மட்டுமே இது சாத்தியம். போலீஸும் மற்றவர்களும் இதனை எப்படி சாத்தியமாக்கினார்கள் என்பது ட்ராபிக்கின் மைய கதை. ஆனால் இதன் வெற்றிக்குக் காரணம் இந்த ஒருவரி கதையில் சம்பந்தப்பட்டவர்களின் கிளைக்கதைகள். மிகச்சிறப்பாக இந்த கிளைக்கதைகள் மைய கதையுடன் பொருத்தப்பட்டது இப்படத்தின் சிறப்பு.

பத்திரிககையாளர்களை சந்தித்து சென்னையில் ஒருநாள் படம் குறித்துப் பேசிய சரத்குமார், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு ஹிதேந்திரனின் பெற்றோரை சிறப்பு விருந்தினர்களாக அழைக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

ட்ராஃபிக்கில் பாடல்கள் இல்லை என நினைவு. தமிழில் படத்தை கெடுக்காமல் இருந்தால் நல்லது.


ட்ராபிக், சென்னையில் ஒருநாள், சரத்குமார், பிரசன்னா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» வீட்டில் செய்ய விசேஷ பூஜை
» வீட்டில் செய்ய விசேஷ பூஜை
» ஆடி மாத விசேஷ வழிபாடுகள் நடைபெறும் தலம்
»  இந்த வாரம்: விசேஷ தினங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum