மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா
Page 1 of 1

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் நாளை காலை நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுக்க உள்ளனர். மயிலாப்பூர், ‘கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் திருக்கோயில்’ பங்குனிப் பெருவிழா கடந்த 17ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. 28ம் தேதி வரை இந்த விழா நடக்கிறது. விழாவில் தினமும் காலை, இரவிலும் கபாலீஸ்வரர் கற்பகாம்பாளுடன் பல்வேறு அவதாரங்களில், பல்வேறு வாகனங்களில் வண்ணமிகு மலர் அலங்காரத்துடன் மேளவாத்தியங்கள் முழங்க மாடவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம்பிடித்தல் உற்சவம் நாளை நடக்கிறது. காலை 7 மணிக்கு கபாலீஸ்வரர் மலர் அங்காரத்தில் மேள வாத்தியத்துடனும், பக்தர்கள் சூழ கோயிலில் இருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். இதையடுத்து, காலை 9 மணிக்கு தேர் வடம்பிடித்தல் தொடங்கும். ஏராளமான பக்தர்கள் தேர் வடம்பிடித்து இழுக்க, தேர் வீதியுலா வரும். மாடவீதியில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள பூப்பந்தலில் கபாலீஸ்வரர் நிலை கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த வைபவத்தை காண, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், செங்கங்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
மாடவீதிகளில் தேர் உலா வரும் தேர் மீண்டும் பிற்பகலில் நிலைக்கு வரும். அங்கிருந்து மீண்டும் இறைவன் திருக்கோயிலுக்கு எழுந்தருள் நிகழ்ச்சி நடக்கும். இந்த நிகழ்ச்சியை அடுத்து இரவு ஐந்திருமேனிகள் வீதியுலா நடைபெறும். மறுநாள் (25ம் தேதி) அறுபத்துமூவர் திருவிழா நடைபெறும். மயிலையில் விழாக்கோலம்: தேர்த்திருவிழா மற்றும் அறுபத்து மூவர்விழா முன்னிட்டு மயிலாப்பூர், லஸ், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் தொண்டு நிறுவனங்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது இருப்பிடங்களில் அலங்கார பந்தல் அமைத்துள்ளனர்.
மயிலை மாடவீதிகளில் நடைபாதை வியாபாரிகள் மண்பாண்டங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், பெண்களுக்கான துணி, மணிகள் விற்பனைக்கு குவித்துள்ளனர். தேர் வடம்பிடித்தல் நடைபெறும் நாளையும், அறுபத்து மூவர்விழா நடைபெறும் நாளை மறுநாளும் திருவிழாவிற்கு வருபவர்களுக்கு மோர், குளிர்பானம், சுண்டல், பொங்கல், அன்னதானம் ஆகியவற்றை வழங்குவார்கள். இந்த திருவிழாவையொட்டி மாடவீதிகளில் போலீசார் தற்காலிக டவர் அமைத்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் இன்று மாலை அறுபத்து மூவர் விழா
» மயிலை கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா
» அன்னையின் தேர் திருவிழா
» அன்னையின் தேர் திருவிழா
» மாங்காடு கோயிலில் தெப்பத் திருவிழா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum