அன்னையின் தேர் திருவிழா
Page 1 of 1
அன்னையின் தேர் திருவிழா
வேளாங்கண்ணி அன்னை பேராலயத்தின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ந்தேதி முதல் செப்டம்பர் 8ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. அன்னை மரியாவின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் இந்த விழா அமைந்துள்ளது. ஆகஸ்ட் 29ந்தேதி தொடங்கும் விழாவில் பங்கேற்பதற்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
முதல் நாள் விழா கொடியேற்றத்துடன் தொடங்கினாலும், வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில் விழா நாட்களில் தினந்தோறும் மதியம் 12 மணிக்கு இங்கு அன்னையின் கொடி ஏற்றப்படுவதை பக்தர்கள் காண முடியும்.
விழா நாட்களில் பக்தர்களின் வசதிக்காக தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, கொங்கனி ஆகிய மொழிகளில் பல திருப்பலிகள் நடைபெறுகின்றன.
செப்டம்பர் 7ந்தேதி மாலை 5.45 மணிக்கு கூட்டுத் திருப்பலியும், அதனைத் தொடந்து அன்னையின் தேர் பவனியும் நடைபெறும். 8ந்தேதி காலை 6 மணிக்கு பெருவிழா ஆடம்பரத் திருப்பலியும், மாலை 6 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» அன்னையின் தேர் திருவிழா
» ஆடி அசையும் ஆண்டாள் தேர்
» மேல்மலையனூர் அங்காளம்மன் தேர் திருவிழா
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா
» பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங

Permissions in this forum:
You cannot reply to topics in this forum