மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் இன்று மாலை அறுபத்து மூவர் விழா
Page 1 of 1

சென்னை: மயிலை கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயிலில் இன்று மாலை 3 மணிக்கு அறுபத்துமூவர் திருவிழா நடக்கிறது. சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கடந்த 17ம் தேதி கோலவிழியம்மனுக்கு அபிஷேகத்துடன் தொடங்கியது. 18ம் தேதி கொடியேற்றமும், 19ம் தேதி சூரிய வட்டம், சந்திரவட்டமும், 20ம் தேதி அதிகார நந்தி காட்சியளித்தலும், 21ம் தேதி புருஷா மிருகமும், 22ம் தேதி சவுடல் விமானமும், 23ம் தேதி பல்லக்கும் நடந்தது. தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது.
இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று நடந்தது. தேரோட்டத்தையொட்டி கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் காலை 7 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். சர்வ அலங்காரத்தில் இருந்த சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 9.01 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்தனர்.
விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான அறுபத்துமூவர் திருவிழா இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது. நாயன்மார்கள் 63 பேர் புடை சூழ விநாயகப்பெருமான், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
அறுபத்துமூவர் விழாவையொட்டி இன்று காலை 9 மணிக்கு திருஞானசம்பந்த சுவாமிகள் எழுந்தருளல் நடந்தது. இதையடுத்து என்பை பூம்பாவையாக்கி அருளுதல் நிகழ்ச்சி நடந்தது. அறுபத்துமூவர் விழாவை முன்னிட்டு மயிலாப்பூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. கோயிலின் அனைத்து பகுதிகளிலும் கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. விழாவை முன்னிட்டு ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியதால் மயிலையில் எங்கு திரும்பினாலும் நெரிசல் காணப்பட்டது. தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், சைவ சமயத்தார் போன்றோர் பல இடங்களில் நீர் மோர், பானகம், அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா
» பழநியில் பங்குனி உத்திர விழா இன்று மாலை தேரோட்டம்

» மயிலை கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா
» மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தேரோட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum