தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மயிலை கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா

Go down

மயிலை கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா  Empty மயிலை கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா

Post  meenu Thu Feb 07, 2013 4:44 pm

சென்னை ம‌யிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ம‌யிலா‌ப்பூ‌ர் கபாலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பிரமோற்சவம் நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சென்னை மட்டுமின்றி வெளி ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து ஈ‌ஸ்வரனை தரிசனம் செய்வா‌ர்க‌‌ள்.

இந்த நிலையில் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 6 மணிக்கு கற்பகாம்பாள், கபாலீசுவரர், சிங்காரவேலர் (முருகன், வள்ளி, தெய்வானை) எழுந்தருளல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து காலை 6.30 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது.

இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவின், 2-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு சூரிய வட்டமும், இரவு 9 மணிக்கு சந்திர வட்ட காட்சியும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 6-ந் தேதி நடக்கிறது. காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் பக்தர்களால், திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட உள்ளது. 7-ந் தேதி அறுபத்து மூவர் விழாவும், 9-ந் தேதி இரவு 9 மணியளவில் இருந்து 10 மணி வரை திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  பங்குனி பெருவிழா : அதிகார நந்தியில் எழுந்தருளினார் கபாலீஸ்வரர்
»  மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா
»  மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் இன்று மாலை அறுபத்து மூவர் விழா
» சின்னத்திருப்பதியில் பங்குனி உத்திரப் பெருவிழா: சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது
» சின்னத்திருப்பதியில் பங்குனி உத்திரப் பெருவிழா: சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum