தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பழநியில் பங்குனி உத்திர விழா இன்று மாலை தேரோட்டம்

Go down

 பழநியில் பங்குனி உத்திர விழா இன்று மாலை தேரோட்டம் Empty பழநியில் பங்குனி உத்திர விழா இன்று மாலை தேரோட்டம்

Post  ishwarya Thu May 23, 2013 2:55 pm

பழநி: பழநியில் பங்குனி உத்திர திருவிழா 20ம் தேதி திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் சப்பரம், தந்தப்பல்லக்கு, தங்கக்குதிரை, தங்கமயில், வெள்ளி ஆட்டுக்கிடா வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடந்தது. பங்குனி உத்திர தேரோட்ட விழா இன்று நடக்கிறது. இன்று காலை 4.30 மணிக்கு முத்துகுமாரசாமி தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் தேர் ஏற்றமும், மாலை 4.35 மணிக்கு கிரி வீதிகளில் தேரோட்டமும் நடைபெறும். திருவிழாவை காண கொடுமுடியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி, மயில் காவடி எடுத்து பக்தி பரவசத்தில் ஆடிப்பாடி மலைக்கோயில் சென்று வருகின்றனர். பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  பழநியில் பங்குனி உத்திர விழா இன்று மாலை தேரோட்டம்
» 26ம் தேதி தேரோட்டம் பங்குனி உத்திர திருவிழா பழநியில் கொடியேற்றம்
» பழனியில் பங்குனி உத்திர தேரோட்டம்: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
» பழனியில் பங்குனி உத்திர தேரோட்டம்: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
»  சபரிமலை கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum