தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சித்திரை விஷு திருவிழாவுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு

Go down

சித்திரை விஷு திருவிழாவுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு Empty சித்திரை விஷு திருவிழாவுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு

Post  ishwarya Thu May 23, 2013 1:54 pm

கேரளாவில் உள்ள பிரசித்திப்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் சித்திரை விஷு திருவிழாவையொட்டி கோவில் நடை இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.

கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் கோவில் மேல்சாந்தி தாமோதரன் போற்றி நடையை திறந்து வைக்கிறார். பின்னர் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. நாளை 11-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

ஒவ்வொரு நாளும் சகஸ்ர கலசாபிஷேகம், களபாபிஷேகம், படி பூஜை மற்றும் புஷ்பாபிஷேகம் நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏப்ரல் 14-ந்தேதி சித்திரை விஷு சிறப்பு பூஜை நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை சித்திரை விஷு கனி காணும் தரிசனம் நடக்கிறது. அப்போது கோவில் தந்திரி மற்றும் மேல்சாந்தி கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கை நீட்டமாக நாணயங்கள் வழங்குகிறார்.

18-ந்தேதியுடன் சித்திரை விஷு திருவிழா மற்றும் சிறப்பு பூஜைகள் நிறைவடைகிறது. அன்றிரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum