வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு
Page 1 of 1

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்ப சாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
இந்த திருவிழா நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இதனால் மேற்கூறிய திருவிழா நாட்களில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுவது வழக்கம்.
இந்த திருவிழா நாட்கள் தவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களிலும், ஓணம், விஷு பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள்-வழிபாடுகள் நடைபெறும். எனவே இந்த நாட்களிலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இந்த நிலையில், வைகாசி மாத பூஜைகளுக்காக சபரி மலை கோவில் நடை, நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. திருநடையை, தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில், மேல்சாந்தி தாமோதரன் போற்றி திறந்து குத்துவிளக்கு ஏற்றுகிறார். அதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெறும்.
நடை திறப்பதையொட்டி, நாளை சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். 15-ந் தேதி முதல், தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனமும் தொடர்ந்து கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல பூஜை-வழிபாடுகள் நடைபெறும்.
15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
19-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். அதையடுத்து பிரதிஷ்டை பூஜை தினத்தை முன்னிட்டு, 20-ந் தேதி மாலை 5.30 மணிக்கு சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.
21-ந் தேதி காலை நடை திறந்து வழக்கமான பூஜை-வழிபாடுகள், பிரதிஷ்டை பூஜைகள், அதிக பொருட் செலவில் நடத்தப்படும் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவற்றுக்கு பிறகு அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு
» சித்திரை விஷு திருவிழாவுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு
» மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு

» மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum