தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

Go down

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு Empty மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

Post  meenu Fri Mar 08, 2013 1:12 pm

திருவனந்தபுரம்: மகர விளக்கு பூஜைகளுக்கு பின்னர் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 20ம் தேதி சாத்தப்பட்டது. இந்நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. மாலை 5.30 மணி அளவில் தந்திரி கண்டரர் ராஜுவரர் முன்னிலையில் மேல்சாந்தி தாமோதரன் போற்றி நடையை திறக்கிறார். மாலை வேறு சிறப்பு பூஜை எதுவும் நடைபெறாது. வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை தினமும் கணபதிஹோமம், உஷபூஜை ஆகிய வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமன சிறப்பு பூஜை நடைபெறும். இந்த நாட்களில் தினமும் காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரை நெய்யபிஷேகமும் மாலையில் தீபாராதனைக்கு பின்னர் படி பூஜைகளும் நடைபெறும். 17ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் மாசி மாத பூஜைகள் நிறைவு பெறுகின்றன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum