மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு
Page 1 of 1

திருவனந்தபுரம்: மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை
நேற்று மாலை திறக்கப்பட்டது. இதையொட்டி சபரிமலையில் ஆயிரக்கணக்கான
பக்தர்கள் குவிந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாள் மண்டல கால
பூஜைகள் கடந்த 26ம் தேதி நிறைவடைந்தன. அன்று இரவு 10 மணி அளவில் கோயில்
நடை சாத்தப்பட்டது. 27ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 3 நாள் கோயில்
நடை சாத்தப்பட்டிருந் தது. இந்த 3 நாட்களிலும் பக்தர்கள் யாரும் சன்னிதானத்
துக்கு அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் மகர விளக்கு கால
பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. மாலை 5.30
மணி அளவில் தந்திரி கண்டரர் ராஜுவரர் முன்னிலையில் மேல்சாந்தி தாமோதரன்
நம்பூதிரி கோயில் நடையை திறந்தார். அப்போது அங்கு குவிந்திருந்த
ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்று கோஷமிட்டனர்.
நேற்று வேறு சிறப்பு பூஜை எதுவும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை 4 மணிக்கு
நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், நெய்அபிஷே கம் உட்பட சிறப்பு பூஜைகள்
தொடங்குகின்றன. ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜை நடக்கிறது. அன்று மாலை
மகர
ஜோதி தரிசனம் நடைபெறும்.
பாதுகாப்பு அதிகரிப்பு
மண்டல
பூஜையின் போது சபரிமலையில் பக்தர்கள் குவிந்ததால் போலீசாரால் கூட்டத்தை
கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சன்னிதானத்தில்
நெரிசல்
ஏற்பட்டது. தற்போது மகர விளக்கு கால பூஜையை யொட்டி சபரிமலையில் பாதுகாப்பு
அதிகரிக்கப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் ஒரு எஸ்.பி, 19
டிஎஸ்பிக்கள்,
38 இன்ஸ்பெக்டர்கள், 160 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2 ஆயிரம் போலீசார்
குவிக்கப்பட்டுள்ளனர். பம்பையில் ஒரு எஸ்.பி தலைமையில் 12 டிஎஸ்பிக்கள், 25
இன்ஸ்பெக்டர்கள், 100 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட ஆயிரத்து 500 போலீசார்
பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு
» மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு
» மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு
» வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு
» மண்டல பூஜை, மகர விளக்கு: சபரிமலை கோயில் வருவாய் ரூ.170 கோடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum