தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வார விசேஷங்கள்

Go down

இந்த வார விசேஷங்கள்  Empty இந்த வார விசேஷங்கள்

Post  ishwarya Wed May 22, 2013 4:51 pm

26-ந்தேதி (செவ்வாய்) * பங்குனி உத்திரம். * காரையார் சொரி முத்தையனார்கோவிலில் பங்குனி உத்திர உற்சவம். * நெல்லை நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் கொடுத்த லீலை. * சகல முருகன் கோவில்களிலும் வள்ளி திருக்கல்யாணம். * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க குதிரையில் பவனி. * செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் ரத உற்சவம். * கீழ்நோக்கு நாள்.

27-ந் தேதி (புதன்)

* பவுர்ணமி. * மதுரை கள்ளழகர் திருக்கல்யாணம், இரவு புஷ்ப பல்லக்கு. * பரமக்குடி முத்தாலம்மன், திருப் புல்லாணி ஜெகநாதர் பெருமாள், ராமகிரி கல்யாண நர சிம்ம பெருமாள் ஆகிய தலங்களில் ரத உற்சவம். * மதுரை பிரசன்ன வெங்கடேசபெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதி உலா. *திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு கண்டருளல். * மேல் நோக்கு நாள்.

28-ந் தேதி (வியாழன்)

* திருப்பரங்குன்றம் ஆண்டவர் பட்டாபிஷேகம், பச்சை குதிரை வாகனத்தில் திருவீதி உலா.

* உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் உற்சவம் ஆரம்பம்.

* மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கள்ளர் திருக்கோலமாய் காட்சி அளித்தல்.

* பெரிய வியாழன்.

* சம நோக்கு நாள்.

29-ந்தேதி (வெள்ளி) * புனித வெள்ளி * முகூர்த்த நாள். * காரைக்கால் அம்மையார் குரு பூஜை. * நெல்லை டவுன் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் எண்ணெய்க் காப்பு உற்சவம். * நெல்லை நெல்லையப்பர் வருசாபிஷேகம், ரிஷப வாகனத்தில் வீதி உலா. * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருக்கல்யாணம். * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் எழுந்தருளல். * உப்பிலியப்பன் கோவில் சீனி வாச பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி சூர்யபிரபையிலும் பவனி. * சம நோக்கு நாள்.

30-ந்தேதி (சனி) * சங்கடஹர சதுர்த்தி * திருக்குறுங்குடி 5 நம்பிகள் 5 கருட வாகனத்தில் பவனி. * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் காலை பெரிய வைர தேரில் பவனி, இரவு தங்க மயில் வாகனத்தில் திருவீதி உலா. * உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் காலை வெள்ளி பல்லக்கிலும், இரவு சேஷ வாகனத்திலும் புறப்பாடு. * சமநோக்கு நாள்.

31-ந்தேதி (ஞாயிறு) * ஈஸ்டர் திருநாள். * தென்திருப்பேரை பெருமாள் கருட வாகனம். * திருவெள்ளறை சுவேதாத்திரி நாதர் கருடவாகனத்தில் புறப்பாடு கண்டருளல். * உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் காலை வெள்ளி பல்லக்கிலும், இரவு சுவாமி வெள்ளி கருட வாகனத்திலும், தாயார் அம்ச வாகனத்திலும் திருவீதி உலா. * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் பவனி. * சமநோக்கு நாள்.

1-ந்தேதி (திங்கள்) * உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் காலை திருப்பல்லக்கிலும், இரவு சுவாமி வெள்ளி அனுமன் வாகனத்திலும், தாயார் வெள்ளி கமலத்திலும் பவனி. * தாயமங்கலம் முத்துமாரியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு * திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் காலை சிம்ம வாகனத்திலும், இரவு சேஷ வாகனத்திலும் வீதி உலா. * சென்னை மல்லீஸ்வரர் விடையாற்று உற்சவம். * சம நோக்கு நாள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum