உடற்பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை
Page 1 of 1

முதலில் உடற்பயிற்சிகளின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.ஏனோ தானோ என்று செய்தால் பலன் கிடைக்காது.
* விடா முயற்சியோடு உடற்பயிற்சிகளை செய்ய பழகிக் கொள்ள வேண்டும். சில பயிற்சிகள் சிலருக்கு உடனே பழகிக் கொள்ள முடியாது; கொஞ்ச கால தாமதம் ஆகும். அதற்காக மனம் தளரவோ,இது நமக்கு வராது என்று ஒதுக்கி விடவோ கூடாது.
* இயற்கை காற்றோட்ட வசதி உள்ள இடங்களில் உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
* பயிற்சியின் போது மூக்கின் வழியாக மட்டுமே சுவாசிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாயினால் சுவாசிக்கக் கூடாது. மூச்சை உள்ளுக்கிழுத்தாலும் வெளியே விடுதலும் ஒரே சீராக மெதுவாக, நிதானமாக நடைபெற வேண்டும்.
* உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த புதிதில் சில நாட்களுக்கு உடல்வலி இருக்கும். அதனை பெரிதுபடுத்தக் கூடாது. அதற்காக பயிற்சி செய்வதையே நிறுத்தி விடக்கூடாது.
* பயிற்சிகளின் போது கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம் சாப்பிட்ட உடன் பயிற்சிகளை ஒரு போதும் செய்யக் கூடாது. பயிற்சி செய்யும் போது வயிறு காலியாக இருக்க வேண்டும். சாப்பிட்டு குறைந்தது 3 மணி நேரம் கழித்த பின்னரே உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
* பயிற்சி முடிந்த உடனேயும் உணவு உட்கொள்ளக் கூடாது. சுமார் 30 நிமிட நேரம் கழிந்த பின்னரே முதலில் நீர் அருந்திவிட்டுப் பின்னர் உணவு உட்கொள்ள வேண்டும்.
* பயிற்சிகளை அவசரமாகவும் படபடப்போடும், முரட்டுத்தனமாகவும் செய்யக்கூடாது. பயிற்சிகளை நிதானமாகச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.
* ஆரம்ப காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் குறைந்த நேரத்திற்கு பயிற்சிகளை பழகிக் கொள்ளவேண்டும். பிறகு படிப்படியாக நேரத்தையும்,எண்ணிக்கையையும் கூட்டிக் கொண்டே வரவேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடைபயிற்சி ஆரம்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை
» உடற்பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை
» யோகாசனம் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை.....
» சைக்கிள் பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை
» உடற்பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum