உடற்பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
Page 1 of 1
உடற்பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
தசைகள் விரிவுபடுத்த செய்யும் உடற்பயிற்சிகளை வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செய்தால் தசைகளுக்கு வலிவும், வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் அது தவறான கருத்து. இம்மாதிரியான பயிற்சிகளை மிகவும் மெதுவாக செய்யவேண்டும்.
உதாரணமாக குனிந்து நிமிர்வது, இடுப்பு தசைகளை முறுக்கும் (Twisting) பயிற்சிகள், மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது முதலான பயிற்சிகளை வேகமாகச் செய்யும்போது தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு வலியும், தசை நார்கிழிதல் முதலான மோசமான விளைவுகள் ஏற்படும்.
ஆகவே தசைகளை தளர்வாக வைத்துக் கொண்டு மெதுவாக ஆனால் திரும்ப, திரும்ப செய்யும்போது தசைகளுக்கு வலிவும், பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும். உடல் வலி, தசை பிடிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் உடற்பயிற்சி செய்ய கூடாது. நாம் தினமும் 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது அவசியம்
கழிவு மண்டலங்களின் இயக்கம், செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கம், முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன. நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400 தசைகளுக்கும் நீட்டவும், மடக்கவும் பயிற்சி கொடுப்பதாக இருக்க வேண்டும்.
இதற்கு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வது போதாது. குறைந்தது 20 நிமிடங்களாவது இந்த தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் தான் நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும். தினமும் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யலாம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» தசைகள் விரிவுபடுத்தும் பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
» ஸ்கிப்பிங் பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
» ஸ்கிப்பிங் பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
» தலைச்சம் பிள்ளைக்கு திருமணம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை?
» நடைபயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை
» ஸ்கிப்பிங் பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
» ஸ்கிப்பிங் பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
» தலைச்சம் பிள்ளைக்கு திருமணம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை?
» நடைபயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum