சமையல்:வாழைப்பூ வடை
Page 1 of 1
சமையல்:வாழைப்பூ வடை
உடலுக்கு தேவையான சத்துக்கள் வாழைப்பூவில் நிறைய உள்ளன. பெரியவர் முதல் சிறுவர் வரை அனைவரும் வாரம் இருமுறையாவது வாழைப்பூவை உணவில் சேர்த்து வருவது நல்லது. வேலைக்கு போகும் பெண்களுக்கு வாழைப்பூவை சுத்தம் செய்வதே சிரமம். அதனால் நேரமின்மையை கருதி அவற்றை சமைப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. அப்படி சாக்கு போக்கு சொல்லாமல் வாழைப்பூவை உணவில் சேர்த்து வாருங்கள், உடலுக்கு நல்லது. இதுபோன்று வடை செய்தால் குழந்தைகளும் சத்தமில்லாமல் சாப்பிட்டு முடிப்பார்கள்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 1
கொண்டைக் கடலை - 100 கிராம்
துவரம்பருப்பு - 300 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
மிளகு - ஒரு டீ ஸ்பூன்
சீரகம் - ஒரு டீ ஸ்பூன்
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
இஞ்சி - ஒரு டீ ஸ்பூன்
பூண்டு - 3 பல்
புதினா - 10 இலைகள்
மோர் - 2 டீ ஸ்பூன்
எண்ணெய் - போதுமான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க வேண்டிய பொருட்கள்:
கொண்டைக்கடலை
துவரம்பருப்பு
காய்ந்த மிளகாய்
மிளகு
இஞ்சி
பூண்டு
செய்முறை:
* மோரில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வாழைப்பூவை எடுத்து ஊற வைக்கவும்.
* வாழைப்பூவிலிருந்து நீக்க வேண்டிய பாகங்களை நீக்கி விட்டு நறுக்கிக்கொள்ளவும்.
* மோரில் மஞ்சள் பொடியை சேர்த்து அதில் நறுக்கிய வாழைப்பூவை சேர்க்கவும்.
* அரைக்க வேண்டிய பொருட்களை ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் அரைக்கவும்.
* மோரில் ஊற வைத்த வாழைப்பூவை பிழிந்து அரைத்த மாவுடன் சேர்க்கவும்.
* அத்துடன் புதினா இலைகளையும் சேர்க்கவும்.
* கடாயில் எண்ணெயை ஊற்றி வடைகள் தயாரிக்கவும்.
* சூடான வடைகளை தேங்காய் சட்னியுடன் சேர்த்துப் பரிமாறவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இன்றைய சமையல் வாழைப்பூ வட
» சமையல் குறிப்பு : வாழைப்பூ வடை
» வாழைப்பூ வடை
» வாழைப்பூ வடை
» வாழைப்பூ வடை
» சமையல் குறிப்பு : வாழைப்பூ வடை
» வாழைப்பூ வடை
» வாழைப்பூ வடை
» வாழைப்பூ வடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum