தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படவாய்ப்புகளுக்காக செக்ஸ் உடன்பாடு செய்து கொள்ளமாட்டேன்: சனாகான் பேட்டி

Go down

படவாய்ப்புகளுக்காக செக்ஸ் உடன்பாடு செய்து கொள்ளமாட்டேன்: சனாகான் பேட்டி Empty படவாய்ப்புகளுக்காக செக்ஸ் உடன்பாடு செய்து கொள்ளமாட்டேன்: சனாகான் பேட்டி

Post  ishwarya Sat May 04, 2013 5:44 pm

மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து, ‘நடிகையின் டைரி’ என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில், சில்க் சுமிதா வேடத்தில் சனாகான் நடிக்கிறார். அனில் டைரக்டு செய்கிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று நடந்தது.

பட அதிபர்கள் கேயார், கே.ராஜன், வினியோகஸ்தர்கள் சங்க செயலாளர் கலைப்புலி ஜி.சேகரன், டைரக்டர்கள் சமுத்திரக்கனி, ஆதிராம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

அதன்பிறகு நடிகை சனாகான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சனாகான் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- சில்க் சுமிதாவின் படங்களை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா?

பதில்:- அவர் வேடத்தில் நான் நடிக்க வேண்டும் என்று முடிவு ஆனதும், இணையதளத்தில் அவர் நடித்த படங்களை தேடிப் பார்த்தேன். அவருடைய உடல்மொழி மற்றும் முகபாவனைகளை பார்த்து தெரிந்துகொண்டேன்.

கேள்வி:- அவருடைய மரணம் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- சில்க் சுமிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சொல்கிறார்கள். ஒரு தரப்பினர் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இன்னொரு தரப்பினர் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் பேசிக்கொள்கிறார்கள். எப்படியிருந்தாலும், சில்க் சுமிதாவின் மரணம் திரையுலகுக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு.

கேள்வி:- நிஜ வாழ்க்கையில் சில்க் சுமிதாவுக்கு நடந்த சோகங்கள் உங்களுக்கும் நடந்தால், என்ன செய்வீர்கள்?

பதில்:- நான் தைரியமான பெண். நான் யாரையும் சார்ந்து இருக்க மாட்டேன். என் சொந்த காலில் நிற்க எனக்கு தெரியும். எந்த ஒரு ஆண் மகனாலும் என்னை விரக்தி அடைய வைக்க முடியாது. என்னால்தான் ஆண்கள் பாதிக்கப்படுவார்கள். ஆண்களால் நான் பாதிப்புக்குள்ளாக மாட்டேன்.

கேள்வி:- சினிமாவில், செக்ஸ் உடன்பாடு செய்து கொண்டால்தான் பட வாய்ப்புகளை பெறமுடியும் என்று ‘நடிகையின் டைரி’ படத்திலேயே வசனம் வருகிறது. அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- செக்ஸ் உடன்பாடு வைத்துக்கொண்டால்தான் பட வாய்ப்புகளை பெறமுடியும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அது, அவரவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால், அது எனக்கு நடக்கவில்லை. நான், உறுதியானவள். யாருடனும், எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.

கேள்வி:- சில்க் சுமிதாவின் வேடத்தில் நடிப்பதால், அவருடைய ஆவி உங்கள் கனவில் வந்தால்...?

பதில்:- நிச்சயமாக சில்க் ஆவி என்னை மிரட்டாது. பாராட்டும். என் வேடத்தில் நன்றாக நடிக்கிறாய் என்று பாராட்டும். என் வேடத்தில் நீ நடிப்பதற்காக பெருமைப்படுகிறேன் என்று சொல்லும்.

இவ்வாறு சனாகான் பதில் அளித்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum