என் மறுபக்கம் தெரிந்துகொண்டேன் : சில்க் வேடத்தில் நடிக்கும் சனாகான் பேட்டி
Page 1 of 1

என் மறுபக்கத்தை தெரிந்துகொண்டேன் என்றார் சில்க் வேடத்தில் நடிக்கும் சனாகான். இதுபற்றி அவர் கூறியதாவது: மலையாளத்தில் சில்க் ஸ்மிதா வாழ்க்கையான ‘கிளைமாக்ஸ்Õ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஷூட்டிங்கில் பங்கேற்றபோது எனக்கு ரசிகர்கள் யாருமே இல்லை. என்னுடைய ரசிகர்கள் எண்ணிக்கை ஜீரோவாக இருந்தது. இந்நிலையில் பிக்பாஸ் நேரடி டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அதன்பிறகு இந்தியாவில் பாதிபேர் என்னைப்பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். இப்போட்டியில் கலந்து கொண்டவர்களில் குறைந்த வயதுடையவள் நான்தான். பக்குவப்பட்ட வயது கொண்டவர்கள் பலர் இருந்தார்கள். அவர்களிடம் நிறைய கற்றுக்கொண்டேன். என்னுடைய மறுபக்கம் என்ன என்பதை அதில்தான் உணர்ந்தேன்.
இதற்கு முன் இருந்ததைவிட இப்போது முதிர்ச்சி உடையவளாக ஆகி இருக்கிறேன். எந்த சூழலையும் சந்திக்கும் தைரியம் வந்திருக்கிறது. இந்த ஷோக்கு பிறகு சல்மான்கானுடன் நடிக்கிறீர்களா என்கிறார்கள். அதுபற்றி இப்போது நான் எதுவும் சொல்ல முடியாது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இம்மாத இறுதி யில் வெளியாகும். சில்க்ஸ்மிதா வேடத்தில் நடிப்பதை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். எனக்குள்ள ஒரே சந்தேகம் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் இயக்குனரின் திருப்திக்கு ஏற்ப நடித்தேனா என்பதுதான். சில்க் கதாபாத்திரத்தோடு நான் ஒன்றுவதற்காக படக்குழு உதவியது. தொடர்ந்து என்னை தேடி வரும் கதாபாத்திரங்களில் நடிப்பேன். கிளாமர் வேடங்களில் மட்டும்தான் நடிப்பேன் என்று எந்த முடிவும் எடுக்கவில்லை. குணசித்ர வேடம், தோழி மற்றும் காதலி, குழந்தைக்கு அம்மா என எல்லாவித கதாபாத்திரத்திலும் நடிக்க ஆசை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிப்பது அதிர்ஷ்டம்: சனாகான்
» சில்க் ஸ்மிதா போன்று சாதிக்க போகிறேன்: சனாகான்
» சில்க்… சில்க்… சில்க்! – சில்க் ஸ்மிதா… இப்போது இந்தியா வின் சென்சேஷன்!
» சில்க் வேடத்தில் நயன்தாரா?
» படவாய்ப்புகளுக்காக செக்ஸ் உடன்பாடு செய்து கொள்ளமாட்டேன்: சனாகான் பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum