நடிகைகள் மதுகுடிப்பதாக பேசியதால் பாதிப்பா?-சனாகான் விளக்கம்
Page 1 of 1
நடிகைகள் மதுகுடிப்பதாக பேசியதால் பாதிப்பா?-சனாகான் விளக்கம்
நடிகைகள் பலர் மது அருந்துவதாக சனாகான் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
இந்தி நடிகைகளை விட தென்னிந்திய நடிகைகள் அதிகமானோர் மது குடிக்கின்றனர் என்றும், இரவு விருந்துகளுக்கு செல்கிறார்கள் என்றும் அவர் கூறினார். தனக்கு அந்த பழக்கம் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
இது சர்ச்சையை கிளப்பியது. சக நடிகைகள் சனாகானை கண்டித்தனர். மிரட்டல்களும் வந்தன. இதனால் அதிர்ச்சியானார்.
தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ள நடிகையின் டைரி என்ற படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்துள்ளார்.
நடிகைகள் மது குடிக்கிறார்கள் என்றதால் உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதா என்று சனாகானிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நான் பத்திரிகைகளுக்கு என்ன சொன்னேனோ அது சரியாக வரவில்லை. திரித்து வந்துள்ளது. ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டு உள்ளனர். ஒவ்வொருவருக்கும் இதுகுறித்து நான் விளக்கம் சொல்ல வேண்டி இருந்தது.
இப்போது சர்ச்சைகளை உணர்ந்து விட்டேன். படிக்கிற விஷயங்கள் எல்லாமே உண்மையானவை என்று மக்கள் நம்புவதில்லை. மக்கள் செவிக்கு போவதை எல்லாம் நான் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் சனாகான் கூறியதாவது:-
“மென்டல்” என்ற இந்திப் படத்தில் சல்மான்கானுடன் நடிக்கிறேன். சல்மான்கான் பழக இனிமையானவர். மதிய இடைவேளையில் படப்பிடிப்பில் இருக்கும் ஒவ்வொருவரையும் சாப்பிட அழைப்பார். வீட்டில் இருந்து பெரிய பாத்திரத்தில் சாப்பாடு வரும். அதை எல்லோருக்கும் கொடுத்து சாப்பிடுவார். என் முழு கவனமும் தற்போது இந்திப்படத்தில்தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சங்கத்துக்குப் போன சனாகான் விவகாரம்
» சனாகான் பெயரில் குழப்பம்
» ப்ரோஸ்டேட் சுரப்பி பாதிப்பா?
» செல்போன் கதிர்வீச்சால் பாதிப்பா?
» தம்மடிப்பது பெண்களுக்கு நல்லது! – சனாகான் கண்டுபிடிப்பு
» சனாகான் பெயரில் குழப்பம்
» ப்ரோஸ்டேட் சுரப்பி பாதிப்பா?
» செல்போன் கதிர்வீச்சால் பாதிப்பா?
» தம்மடிப்பது பெண்களுக்கு நல்லது! – சனாகான் கண்டுபிடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum