செல்போன் கதிர்வீச்சால் பாதிப்பா?
Page 1 of 1
செல்போன் கதிர்வீச்சால் பாதிப்பா?
செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால், உடலுக்குப் பாதிப்பு, மூளை நரம்புகளை இந்த கதிர்வீச்சுகள் பாதிப்படையச் செய்யும் என்று தகவல்கள் வெளியான நிலையில், குழந்தைகளுக்கும், விடலைப் பருவத்தினருக்கும் செல்போன் கதிர்வீச்சுகளால் பாதிப்பு ஏதுமில்லை என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஜெர்மனியில் அரசின் சார்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும், இதற்காக 8 வயது முதல் 17 வயதுடைய சுமார் 3 ஆயிரம் பேரிடம் 24 மணி நேரம் அளவுக்கு இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கும், தலைவலி, சளி தொந்தரவு போன்ற உடல்நலப் பாதிப்புகளுக்கும் நேரடித் தொடர்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
குறுகிய கால நோய் பாதிப்புகள் ஏதுமில்லை என்ற போதிலும், செல்போன் கதிர்வீச்சால் குழந்தைகளுக்கு நரம்பியல் தொடர்பான நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு போன்றவை ஏற்படும் என்று கதிரியக்கத் தடுப்பு அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கும் ஏற்படக்கூடிய நீண்டகால உடல்நலப் பாதிப்புகள் எவையென்று உறுதியாகத் தெரியவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
வயர்லெஸ் தொழில்நுட்பத்தை குழந்தைகள் பயன்படுத்தும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்புடன் பயன்படுத்துவதே சிறந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» செல்போன் கதிர்வீச்சால் பாதிப்பா?
» எய்ட்ஸ் பாதிப்பா?
» ப்ரோஸ்டேட் சுரப்பி பாதிப்பா?
» நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்-வழக்கறிஞரால் பாதிப்பா? (பாகம்-2)
» செல்போன் காது கேட்கும் திறனைப் பாதிக்குமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum