சரஸ்வதிசபதம்' பெயரில் புதுபடம் தயாரிக்க எதிர்ப்பு: சிவாஜி ரசிகர்கள் வக்கீல் நோட்டீஸ்
Page 1 of 1

சிவாஜி கணேசன், சாவித்திரி, பத்மினி போன்றோர் நடித்து 1966-ல் வெளியான புராண படம் 'சரஸ்வதி சபதம்' சிவாஜி கணேசன் நாரதர் மற்றும் வித்யாபதி என்ற புலவர் என இரு வேடங்களில் நடித்தார். அகர முதல எழுத்தெல்லாம், தெய்வம் இருப்பது எங்கே, கல்வியா செல்வமா வீரமா, தாய் தந்த பிச்சையிலே போன்ற இனிமையான பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்று உள்ளன.
தற்போது ஜெய் நடிக்கும் புதிய படத்துக்கு 'சரஸ்வதி சபதம்' என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இதற்கு சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் கே.வி.பி.பூமிநாதன், சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பட உரிமையாளர்களிடம் அனுமதி பெற்றுத்தான் தலைப்பை பயன்படுத்துவதாக தயாரிப்பு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் ஆகியோருக்கு சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திர சேகரன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
சரஸ்வதி சபதம் பெயரில் படம் எடுப்பது சிவாஜி ரசிகர்களை புண்படுத்துவதாக உள்ளது. இப்படத்துக்கான விளம்பரங்களில் மது அருந்தும் பார் இடம் பெற்றுள்ளது. திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருமால் பெருமை, கர்ணன் போன்றவை இந்துக்கள் மற்றும் ரசிகர்களின் சென்டிமென்ட் சம்பந்தப்படடவை. அந்த பெயர்களை புதுப்படங்களுக்கு பயன் படுத்த கூடாது. எனவே தலைப்பை மாற்ற வேண்டும். இல்லையேல் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குடும்பத்தினர் அனுமதியின்றி சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக்க எதிர்ப்பு – இயக்குனருக்கு வக்கீல் நோட்டீஸ்
» தில்லு முல்லு ரீமேக் – ஒரிஜினல் தயாரிப்பாளர் எதிர்ப்பு – பாலச்சந்தர் மகளுக்கு வக்கீல் நோட்டீஸ்
» வசந்தமாளிகை இன்று ரிலீஸ்: சிவாஜி ரசிகர்கள் கட் அவுட்டுக்கு அபிஷேகம்

» சிவாஜி அறிமுகமான பராசக்தி வைரவிழா: மதுரையில் ரசிகர்கள் ஏற்பாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum