குடும்பத்தினர் அனுமதியின்றி சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக்க எதிர்ப்பு – இயக்குனருக்கு வக்கீல் நோட்டீஸ்
Page 1 of 1
குடும்பத்தினர் அனுமதியின்றி சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக்க எதிர்ப்பு – இயக்குனருக்கு வக்கீல் நோட்டீஸ்
1980-களில் தமிழ் திரையுலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்தார். 1996-ல் சில்க்ஸ்மிதா சென்னையில் மர்மமாக இறந்தார். சாலிகிராமத்தில் அவர் தங்கி இருந்த அபார்ட்மென்ட் வீட்டில் தூக்கில் அவரது உடல் தொங்கிக் கொண்டு இருந்தது. நிதி நெருக்கடியால் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
கொலை செய்து பிணத்தை தூக்கில் தொங்க விட்டதாகவும் பேசினர். சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை “ த தர்டி பிக்சர்ஸ்” என்ற பெயரில் இந்தியில் படமாகி வருகிறது. சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.
இதற்கிடையில் சில்க் ஸ்மிதா படத்தை வெளியிட அவரது சகோதரர் நாகவரபிரசாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:- சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக எடுப்பதாக பத்திரிகை, டெலிவிஷன்களில் செய்தி பார்த்து அறிந்து கொண்டோம். சில்க் ஸ்மிதாவின் குடும்பத்தினராகிய எங்களிடம் படம் எடுப்பது பற்றி பேசவில்லை. அனுமதியும் பெறவில்லை.
எனவே இந்த படத்தை எடுக்க கூடாது என்று இயக்குனர் மிலன், தயாரிப்பாளர் ஏக்தாகபூர் ஆகியோருக்கு, வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். அவர்களிடம் இருந்து பதில் இல்லை. எனவே இரண்டாவது வக்கீல் நோட்டீஸ் ஐதராபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மூலம் விரைவில் அனுப்பப்படும். சில்க்ஸ்மிதா படத்தை நாங்கள் பார்க்க வேண்டும். அதில் உள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க வேண்டும்.
சில்க் ஸ்மிதா சாவின் பின்னணியில் உள்ள நிலவரம் இதுவரை எங்களுக்கு தெரியவில்லை. நிதி நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். அது உண்மையல்ல. சில்க்ஸ்மிதா பற்றி படம் எடுப்பவர்களிடம் நாங்கள் பணம் எதிர்பார்க்கவில்லை. அந்த படம் மூலம் குடும்பத்தினர் மனம் புண்படக் கூடாது என்றே கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சில்க்… சில்க்… சில்க்! – சில்க் ஸ்மிதா… இப்போது இந்தியா வின் சென்சேஷன்!
» சரஸ்வதிசபதம்' பெயரில் புதுபடம் தயாரிக்க எதிர்ப்பு: சிவாஜி ரசிகர்கள் வக்கீல் நோட்டீஸ்
» தில்லு முல்லு ரீமேக் – ஒரிஜினல் தயாரிப்பாளர் எதிர்ப்பு – பாலச்சந்தர் மகளுக்கு வக்கீல் நோட்டீஸ்
» எண்பது கேஜி சில்க் ஸ்மிதா
» சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிப்பாரா?
» சரஸ்வதிசபதம்' பெயரில் புதுபடம் தயாரிக்க எதிர்ப்பு: சிவாஜி ரசிகர்கள் வக்கீல் நோட்டீஸ்
» தில்லு முல்லு ரீமேக் – ஒரிஜினல் தயாரிப்பாளர் எதிர்ப்பு – பாலச்சந்தர் மகளுக்கு வக்கீல் நோட்டீஸ்
» எண்பது கேஜி சில்க் ஸ்மிதா
» சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிப்பாரா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum