தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிவாஜி அறிமுகமான பராசக்தி வைரவிழா: மதுரையில் ரசிகர்கள் ஏற்பாடு

Go down

சிவாஜி அறிமுகமான பராசக்தி வைரவிழா: மதுரையில் ரசிகர்கள் ஏற்பாடு Empty சிவாஜி அறிமுகமான பராசக்தி வைரவிழா: மதுரையில் ரசிகர்கள் ஏற்பாடு

Post  ishwarya Fri Mar 29, 2013 1:28 pm

சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்தின் வைர விழாவை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

இப்படம் 1952-ல் தீபாவளிக்கு வெளியானது. சிவாஜி ஜோடியாக பண்டரிபாய் நடித்தார். எஸ்.எஸ். ராஜேந்திரனும் இப்படத்தில்தான் அறிமுகமானார். கிருஷ்ணன் பங்சு இயக்கினார். இவர்தான் சிவாஜியின் 125-வது படமான உயர்ந்த மனிதன் படத்தையும் டைரக்டு செய்தார்.

பராசக்தியில் இடம் பெற்ற ஒரு பெண்ணின் மனதை தொட்டு போறவரே, ஓ ரசிக்கும் சீமானே, காகா காகா காக்கை அண்ணாவே நீங்க அழகான வாயால், பூமாலை நீயே புழுதி மண்மேலே போன்ற இனிமையான பாடல்கள் இடம் பெற்றன.

கருணாநிதி இப்படத்துக்கு வசனம் எழுதியதுடன் முதல் தடவையாக பாடல்களும் எழுதினார். சிவாஜி இப்படத்தில் நடிக்க ரூ.250 சம்பளம் பெற்றார்.

பராசக்தியில் சிவாஜி பேசிய முதல் வசனமே சக்சஸ். இதில் வரும் கோர்ட்டு சீன்கள் அப்போது திரையுலகையே கலக்கின. அந்த வசனங்களைதான் இளம் நடிகர்கள் பேசி சினிமாவில் வாய்ப்பு கேட்பதை வழக்கமாக வைத்து இருந்தார்கள்.

கவிஞர் கண்ணதாசன் நீதிபதியாக திரையில் அறிமுகமான முதல் படமும் இது. தமிழகத்தில் 10 தியேட்டர்களில் 100 நாட்களும் 60 தியேட்டர்களில் 50 நாட்களும் ஓடின. 2593 இருக்கைகள் கொண்ட ஆசியாவின் பெரிய திரையரங்கமான மதுரை தங்கம் தியேட்டரில் முதலில் திரையிடப்பட்ட படம் பராசக்தி. கதை, வசனம் இசை தட்டாகவும் புத்தமாகவும் வந்த சமூக படமும் இதுவாகும்.

கொழும்பில் 294 நாட்களும், யாழ்ப்பானத்தில் 116 நாட்களும் ஓடி முதல் முதல் வெளிநாட்டில் வெள்ளி விழா கண்ட படம் என்ற பெயரையும் பெற்றது.

பராசக்தி வந்து 60 ஆண்டுகள் ஆவதை தொடர்ந்து வருகிற 6-ந்தேதி மதுரையில் இதன் வைர விழாவை ரசிகர்கள் நடத்த உள்ளதாக சிவாஜி சமுக நல பேரவை தலைவர் சந்திரசேகரன் அறிவித்து உள்ளார். எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் இதில் பங்கேற்கின்றனர். தமிழகம் முழுவதிலும் இருந்து சிவாஜி ரசிகர்கள் விழாவுக்கு வருகிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 15 பெண்களுக்கு இலவச திருமணம் – ஏற்பாடு ரசிகர்கள்… நடத்தி வைப்பது விஜய்!
» வசந்தமாளிகை இன்று ரிலீஸ்: சிவாஜி ரசிகர்கள் கட் அவுட்டுக்கு அபிஷேகம்
» வசந்தமாளிகை இன்று ரிலீஸ்: சிவாஜி ரசிகர்கள் கட் அவுட்டுக்கு அபிஷேகம்
» கர்ணன், குடியிருந்தகோயில் இன்று ரிலீஸ்: தியேட்டர்களில் திரண்ட எம்.ஜி.ஆர்.-சிவாஜி ரசிகர்கள்
» மதுரையில் நாளை விஜய் மக்கள் இயக்க மாநாடு… ரசிகர்கள் மூலம் ‘வேலாயுதம்’ பாடல் வெளியீடு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum