கொல்கத்தாவுக்கு எதிரான ஐ.பி.எல். போட்டி: மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
Page 1 of 1

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று, கொல்கத்தாவில் நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. மழை காரணமாக அரை மணி நேரம் தாமதமாக, இரவு 8.30 மணிக்கு போட்டி தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் ஆடிய கொல்கத்தா பேட்ஸ்மேன்கள், மும்பை சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் ஓவரை பதம் பார்த்தனர். 2 ஓவர்கள் வீசிய அவர் 35 ரன்கள் கொடுத்தார். அதன்பின்னர் ஜான்சன், ஓஜா ஆகியோர் நேர்த்தியாக வீசி, பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினர்.
அதிரடியாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் பதான் 19 ரன்களில் ஜான்சனிடம் விக்கெட்டை இழந்தார். 26 ரன்கள் சேர்த்த காம்பீரை ஓஜா வெளியேற்றினார். பொறுப்புடன் ஆடிய காலிஸ், 37 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின்னர் இணைந்த திவாரி-மார்கன் ஜோடியும் தங்கள் பங்களிப்பை நிறைவேற்றி ஸ்கோரை உயர்த்தியது.
மார்கன் 25 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 31 ரன்களும், திவாரி 24 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 33 ரன்களும் விளாசினர். கடைசி ஓவரில் திவாரியை வெளியேற்றிய மலிங்கா, கடைசி பந்தில் தாஸ் விக்கெட்டை கைப்பற்றினார்.
இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. மும்பை தரப்பில் ஜான்சன், மலிங்கா, ஓஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சச்சின் மற்றும் ஸ்மித் களம் இறங்கினர். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் 2 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த கார்த்திக் 7 ரன்னில் வெளியேறினார். அதன்பின் ஷர்மா, ஸ்மித் உடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய ஸ்மித் 45 பந்தில் 62 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
ஷர்மாவும் பொல்லார்டும் ஜோடி சேர்ந்து ரன்கள் குவிக்க ஆரம்பித்தனர். ஷர்மா 34 ரன்னிலும் பொல்லார்டு 33 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
இறுதியில் மும்பை அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புனே அணிக்கு எதிரான போட்டி: மும்பை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
» மும்பைக்கு எதிரான ஆட்டம்: ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» டெல்லிக்கு எதிரான ஆட்டம்: பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்: 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி
» சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டி: கொல்கத்தா 48 ரன் வித்தியாசத்தல வெற்றி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum