டெல்லிக்கு எதிரான ஆட்டம்: பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
Page 1 of 1
டெல்லிக்கு எதிரான ஆட்டம்: பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ஐ.பி.எல். தொடரில், இன்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி, டெல்லி அணியை பேட் செய்ய அழைத்தது.
உள்ளூர் ரசிகர்களின் ஆரவார வரவேற்புடன் களமிறங்கிய டெல்லி அணி நிதானமாக ஆடியது. முதல் ஓவரில் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்த துவக்க வீரர் ஜெயவர்தனே, பிரவீன் குமாரிடம் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த மெர்வ், 8 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
அதன்பின்னர் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக்குடன், வார்னர் இணைய, ஆட்டம் விறுவிறுப்பானது. ஆனால், அவர்களின் ரன்ரேட்டை பஞ்சாப் பந்து வீச்சாளர்களை வெகுவாக கட்டுப்படுத்தினர். 21 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 23 ரன்கள் எடுத்த சேவாக்கை, ஹர்மீத் சிங் அவுட் ஆக்கினார். அதன்பிறகும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.
ஜுனேஜா (14 ரன்), ஜாதவ் (ரன் இல்லை), போத்தா (1 ரன்) ஆகியோர் விரைவில் பெவிலியன் திரும்பினர். 89 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகள் இழந்த நிலையில், மறுமுனையில் விக்கெட்டைக் காப்பாற்ற போராடிய டேவிட் வார்னர் 36 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். அவரது விக்கெட்டை பிரவீன் குமார் கைப்பற்றினார்.
இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் ஹர்மீத் சிங் 3 விக்கெட்டுகளும், பிரவீன் குமார் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதையடுத்து 121 ரன்கள் என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. தொடக்க வீரரான கேப்டன் கில்கிறிஸ்ட் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் திரும்பினார். அடுத்து களம் இறங்கிய பொமர்ஸ்பட்ச், சிங்குடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர்.
பொமர்ஸ்பட்ச் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதன்பின் மில்லர் களம் இறங்கினார். சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த சிங் 24 ரன்னில் ரன் அவுட் ஆனார்.
அடுத்து வந்த வோரா 8 ரன்னிலும், ஹசி 20 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இறுதியில் பஞ்சாப் அணி 17 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மில்லர் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்: 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி
» மும்பைக்கு எதிரான ஆட்டம்: ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» கொல்கத்தாவுக்கு எதிரான ஐ.பி.எல். போட்டி: மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்
» புனே அணிக்கு எதிரான போட்டி: மும்பை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
» மும்பைக்கு எதிரான ஆட்டம்: ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» கொல்கத்தாவுக்கு எதிரான ஐ.பி.எல். போட்டி: மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்
» புனே அணிக்கு எதிரான போட்டி: மும்பை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum