தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐ.பி.எல். கிரிக்கெட்: மைதானத்தில் காம்பீர் -கோலி வாக்குவாதம்

Go down

ஐ.பி.எல். கிரிக்கெட்: மைதானத்தில் காம்பீர் -கோலி வாக்குவாதம் Empty ஐ.பி.எல். கிரிக்கெட்: மைதானத்தில் காம்பீர் -கோலி வாக்குவாதம்

Post  ishwarya Sat May 04, 2013 12:58 pm

பெங்களூரில் இன்று நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி 154 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து ஆடிய பெங்களூர் அணி 17.3 ஓவர்களிலேயே 158 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது.

இப்போட்டியில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, பிரதீப் சங்வான் வீசிய 9-வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால், அடுத்த ஓவரில் பாலாஜி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

அவரை அவுட் ஆக்கியதும் கொல்கத்தா கேப்டன் காம்பீர், சக வீரர்களுடன் உற்சாகமாக துள்ளிக் குதித்தார். இதனால் கோபமடைந்த கோலி, காம்பீரைப் பார்த்து திட்டியபடி மைதானத்தில் துப்பினார். இதனால் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே, ரஜத் பாட்டியா வந்து இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கிவிட்டார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum