ஆடுகளத்தில் மோதல்: காம்பீர், கோலிக்கு கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை
Page 1 of 1

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சமீபத்தில் காம்பீரும், வீராட் கோலியும் மோதிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 11-ந்தேதி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- வீராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.
இதில் பெங்களூர் அணி 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் கோலி ஆட்டம் இழந்து வெளியே செல்லும் போது அவருக்கும், காம்பீருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் கோபமாக ஒருவரையொருவர் சத்தம் போட்டுக்கொண்டனர். மற்ற வீரர்கள் தலையிடாவிட்டால் இருவரும் அடித்து கொள்வார்கள் போன்ற சூழ்நிலை உருவானது.
இந்திய அணி மற்றும் டெல்லி ரஞ்சி அணிக்காக ஒன்றாக விளையாடும் இந்த இருவரும் ஆடுகளத்தில் மோதிக்கொண்டது. அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் இது தொடர்பாக இருவருக்கும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இது தொடர்பாக காம்பீர், வீராட் கோலியை கிரிக்கெட் வாரியம் எச்சரித்து உள்ளது. இருவரும் இனி ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரிய துணைத்தலைவரும், ஐ.பி.எல். தலைவருமான ராஜீவ் சுக்லா கூறும்போது, ஆடுகளத்தில் வீரர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை
» ஐ.பி.எல். கிரிக்கெட்: மைதானத்தில் காம்பீர் -கோலி வாக்குவாதம்
» இந்திய கிரிக்கெட் வீரர் வீரட் கோலிக்கு போட்டி ஊதியத்தின் 50 சதவீதம் அபராதம்
» விஜய், சூர்யா, மாதவன், தனுஷ், ஜெயம்ரவி நடிகர் சங்கம் சார்பில் புதிய கிரிக்கெட் அணி: இந்தி, தெலுங்கு நடிகர்களுடன் மோதல்
» கொல்கத்தா வீரர்கள் ஒற்றுமையுடன் ஆடவில்லை: காம்பீர் வேதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum