கொல்கத்தா வீரர்கள் ஒற்றுமையுடன் ஆடவில்லை: காம்பீர் வேதனை
Page 1 of 1

ராய்ப்பூரில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்னே எடுத்தது. ரஜீத்பாட்டியா அதிகபட்சமாக 26 ரன் எடுத்தார். உமேஷ்யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வார்னர் 42 பந்தில் 66 ரன் எடுத்து (6 பவுண்டரி, 3 சிக்சர்) வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். டெல்லி அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும்.
வெற்றி குறித்து டெல்லி கேப்டன் ஜெயவர்த்தனே கூறும்போது, ஆட்டத்தின் சூழ்நிலையை எங்களுக்கு ஏற்ற வகையில் சாதகமாக்கி கொண்டோம். பீல்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. ரசிகர்களின் ஆதரவு எங்களை உற்சாகப்படுத்தியது என்றார்.
இந்த தோல்வி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் காம்பீர் கூறியதாவது:-
எனது ரன்அவுட் முட்டாள் தனமானது. 60 ரன்னுக்கு 6 விக்கெட் என்று நாங்கள் இதுவரை நடந்த எந்த ஆட்டத்திலும் இருந்தது இல்லை. தோல்விக்கு நாங்களே முழு பொறுப்பு. பேட்டிங்கிலும் சரி, பந்து வீச்சிலும் சரி நாங்கள் ஒற்றுமையுடன் விளையாட வில்லை. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியமாகிறது.
இனிவரும் ஒவ்வொரு ஆட்டத்திலும் கவனத்துடன் விளையாட வேண்டும். எங்களுக்கு ஒவ்வொரு ஆட்டமும் வாழ்வா? சாவா? என்ற நிலை தான் உள்ளது.
இவ்வாறு காம்பீர் கூறியுள்ளார்.
கொல்கத்தா அணி 11-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நாளையும், டெல்லி அணி ஐதராபாத்தை 4-ந்தேதியும் எதிர்கொள்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கொல்கத்தா அணி 2-வது வெற்றி: அதிரடியாக ஆடிய மார்கனுக்கு காம்பீர் பாராட்டு
» ‘கொலைவெறி’ க்கு ரஜினி ஆடவில்லை !
» ஆமீர் கான் படத்தில் ரஜினிகாந்த் ஆடவில்லை: இயக்குனர் ரீமா
» ஐ.பி.எல். கிரிக்கெட்: மைதானத்தில் காம்பீர் -கோலி வாக்குவாதம்
» ஆடுகளத்தில் மோதல்: காம்பீர், கோலிக்கு கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum